FIFA World Cup 2022... 24 மணி நேரத்தில் நடைபெற்ற 3 போட்டிகள் 0-0 என டிரா.... 9 போட்டியில் 4 டிரா
தோஹா:
கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதுவரையில் நடந்து முடிந்துள்ள 9 போட்டிகளில் நான்கு போட்டிகள் சமனில் முடிந்துள்ளன. அதில் கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற மூன்று போட்டிகளில் 0-0 என எந்த அணியும் கோல் பதிவு செய்யாமல் ஆட்டம் சமனில் முடிந்துள்ளது.
டென்மார்க் - துனிசியா, போலந்து - மெக்சிகோ மற்றும் மொராக்கோ - குரோஷியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளில் எந்தவொரு அணியும் கோல் பதிவு செய்யவில்லை.
கடந்த 2018 உலகக் கோப்பை தொடரில் ஒரே ஒரு போட்டிதான் 0-0 என சமனில் முடிந்தது. ஆனால், இந்த முறை இதுவரையிலான 9 போட்டிகளில் மூன்று போட்டிகள் 0-0 என முடிவடைந்துள்ளது.
நேற்று நடைபெற்ற குரூப் சுற்று ஆட்டத்தில் அர்ஜென்டினா, சவுதி அரேபியாவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது. அதுவே பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற அணிகள் தங்கள் முதல் ஆட்டத்தில் முறையே 4 மற்றும் 6 கோல்களை பதிவு செய்து மாஸ் காட்டியுள்ளன.
நாளை பெல்ஜியம் - கனடா, சுவிட்சர்லாந்து - கேமரூன், உருகுவே - தென் கொரியா மற்றும் போர்ச்சுகல் - கானா அணிகள் தங்கள் முதல் குரூப் சுற்றுப் போட்டியில் விளையாட உள்ளன. வரும் டிசம்பர் 3-ம் தேதி வரையில் குரூப் சுற்று போட்டிகள் நடைபெற உள்ளது.
Morocco and Croatia share the points. 🤝@adidasfootball | #FIFAWorldCup
— FIFA World Cup (@FIFAWorldCup) November 23, 2022
Ochoa saves the day again! 🇲🇽🧤@adidasfootball | #FIFAWorldCup
— FIFA World Cup (@FIFAWorldCup) November 22, 2022
It ends all square at the Education City Stadium 🤝@adidasfootball | #FIFAWorldCup
— FIFA World Cup (@FIFAWorldCup) November 22, 2022
The points are shared 🤝@adidasfootball | #FIFAWorldCup
— FIFA World Cup (@FIFAWorldCup) November 21, 2022
Searching for the breakthrough 👊#FIFAWorldCup | #Qatar2022 pic.twitter.com/ALkDXzV2wZ
— FIFA World Cup (@FIFAWorldCup) November 23, 2022
Plenty of early battles so far... #FIFAWorldCup | #Qatar2022 pic.twitter.com/660kTA40nG
— FIFA World Cup (@FIFAWorldCup) November 23, 2022
#MAR pic.twitter.com/HhkWqQ3uNV
— FIFA World Cup (@FIFAWorldCup) November 23, 2022
#HRV pic.twitter.com/kB2xtpcqOI
— FIFA World Cup (@FIFAWorldCup) November 23, 2022
Line-ups are here!@EnMaroc & @HNS_CFF fans, let us know how you're feeling 🙌#FIFAWorldCup | #Qatar2022
— FIFA World Cup (@FIFAWorldCup) November 23, 2022
🔥 Another full day of football!@adidasfootball | #FIFAWorldCup
— FIFA World Cup (@FIFAWorldCup) November 23, 2022
No comments
Thank you for your comments