வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை, எளிய சிறுபான்மையினருக்கு நலதிட்ட உதவிகள்...
காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் கீழ் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை, எளிய சிறுபான்மையினருக்கு ரூ. 30.80 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி. திரு. கே.எஸ். மஸ்தான் ஆகியோர் வழங்கினார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் கீழ் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை, எளிய சிறுபான்மையினருக்கு ரூ. 30.80 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி. திரு. கே.எஸ். மஸ்தான் ஆகியோர் வழங்கினார்கள். சிறுபான்மையினருக்கு நலத்திட்ட உதவி வழங்கினார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 10123 மாணவ/ மாணவியருக்கு ரூ.2.56 கோடி தொகையில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. மேலும், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 130 பயனாளிகளுக்கு இலவச சலவைப் பெட்டி வழங்கப்பட்டுள்ளது. தற்போது 20 பயனாளிகளுக்கு சலவைப் பெட்டிகள் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் 161 பயனாளிகளுக்கு ரூ.18.78 இலட்சம் தொகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது 47 பயனாளிகளுக்கு ரூ.5.70 இலட்சம் தொகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட கிறித்துவ மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் 54 பயனாளிகளுக்கு ரூ.10 இலட்சம் தொகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தற்போது 101 பயனாளிகளுக்கு ரூ.20 இலட்சம் தொகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் 75 நபர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. தற்போது 51 நபர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.
மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய சிறுபான்மையினர் பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற தற்போது 25 மின் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளன. மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சார்ந்த 55 பயனாளிகளுக்கு இலவச மின் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.
அமைச்சர் பெருமக்கள் அவர்கள் இந்நிகழ்ச்சியில் பேசியதாவது:
இன்று 22.11.2022 காஞ்சிபுரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் கீழ் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை, எளிய சிறுபான்மையினர் 243 நபர்களுக்கு ரூ. 30.80 இலட்சம் செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றது.
பழமை வாய்ந்த பள்ளிவாசல்கள் தர்காக்கள் பழுது நீக்கி பராமரிக்க தமிழக அரசு ரூ.6 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 76 பள்ளிவாசல்கள் தர்க்காக்கள் பழுது நீக்கி பராமரிக்கப்பட்டுள்ளன. 20 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 60 வயது நிரம்பிய இமாம் அரபு ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.3,000/- ஓய்வூதியமாக வழங்கப்பட்டுள்ளது. இவ்ஓய்வூதியத்தை 1318 நபர்கள்பெற்றுள்ளனர்.

உலாமா ஓய்வூதியதாரர் இறந்த பிறகு அவரது குடும்பத்தினருக்கு ரூ1,500/- குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படுகின்றது. முதல் முறை ஹஜ் பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாட்டை சேர்ந்த ஹஜ் பயணிகளுக்கு ரூ.10 கோடி தமிழக அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒர் ஆண்ட்டில் மட்டும் ரூ.4 கோடி 98 ஆயிரத்து 462 சிறுபான்மையினர் மாணவ/ மாணவியர்களுக்கு பள்ளிக் கல்வி மற்றும் மேற்படிப்பு பயில ரூ.114.95 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது,
இஸ்லாமியர் மற்றும் கிறித்துவர்கள் அடைக்கதலங்கள் அமைக்க நிலம் கையகப்படுத்த அரசு உதவி புரிந்து வருகிறது.தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் தமிழ்நாட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள், பார்சியர்கள், ஜெயின் பிரிவு சார்ந்தவர்களுக்கு தனிநபர்கடன் சுயத்தொழில் தொடங்க கடன், சுய உதவி குழுக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. மேலும், இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீத தனி இட ஓதுக்கீடு வழங்கியது மாண்புமிகு முன்னாள் முதல்வர் டாக்டர் கருணாநிதி ஆட்சியில்தான் அதேபோல் 1999 ஆம் ஆண்டு முதன்முதலாக நோம்பு கஞ்சி தயாரிக்க இலவச அரிசி வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார். அதுமட்டுமில்லாமல் நபிநாயகம் பிறந்தநாளை மாநில அரசு விடுமுறை நாளாக அறிவித்து பின்னர் தேசிய விடுமுறை நாளாக அறிவிக்க செய்தவர் முன்னாள் முதல்வர் டாக்டர் கருணாநிதி என்பதை இத்தருணத்தில் நான் சொல்ல கடமைபட்டிருக்கிறேன்.
ஆகவே, சிறுபான்மை நலத்துறையில் செயல்படுத்தபடும் திட்டங்கள் குறித்து தெரிந்துகொண்டு அவற்றை உரியமுறையில் விண்ணப்பித்து பயன்பெறும்மாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்த்தி, இ.ஆ.ப., காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் திருமதி.நித்தியா சுகுமார், திருப்பெரும்புதூர் ஒன்றிய குழுத்தலைவர் திரு.எஸ்.டி.கருணாநிதி உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.







No comments
Thank you for your comments