மறைந்த முன்னாள் அமைச்சர் சி.வி.எம்.அண்ணாமலையின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இலவச மருத்துவ முகாம்
மறைந்த முன்னாள் அமைச்சர் சி.வி.எம்.அண்ணாமலையின் பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் மாபெரும் இலவச மருத்துவ முகாமினை காஞ்சிபுரம் எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் துவக்கி வைத்தனர்.
பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில், திமுகவின் முக்கிய நிர்வாகியாக இருந்தவரும், செந்தமிழ்ச் செல்வர் என போற்றப்பட்ட வரும், முத்தமிழறிஞர் கலைஞரின் அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக பணியாற்றியவரும், தற்போதைய காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினரின் தாத்தாவுமான, முன்னாள் அமைச்சர் சிவிஎம்.அண்ணாமலையின் 106-வது பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் மேல்நிலைப் பள்ளியில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
வானகரம் அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை,காஞ்சிபுரம் லைஃப் கேர் மருத்துவமனை,காஞ்சிபுரம் குமார்ஸ் கண் சிகிச்சை மையம் மருத்துவமனை இணைந்து காஞ்சிபுரம் செந்தமிழ்ச்செல்வர் CVM அண்ணாமலை அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற மாபெரும் இலவச மருத்துவ முகாமினை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர்,காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் CVMP.எழிலரசன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
மருத்துவ முகாமில் ரத்த அழுத்த பரிசோதனை,சர்க்கரை பரிசோதனை, இசிஜி, எக்கோ, எக்ஸ்ரே, நுரையீரல் பரிசோதனை, கண் பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ்,திமுக மாநகர செயலாளர் CKV.தமிழ்ச்செல்வன், மாவட்ட பொருளாளர் சன் பிரண்ட் கே.ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் P.M.குமார், குமணன், சாலவாக்கம் குமார், படுநெல்லி பாபு, வாலாஜாபாத் பேரூர் செயலாளர் பாண்டியன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சிகாமணி,தலைமை செயற்குழு உறுப்பினர் M.S.சுகுமார், வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன்,காஞ்சிபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் மலர்கொடி குமார்,பகுதி செயலாளர்கள் திலகர், மண்டல குழு தலைவர் சந்துரு,தசரதன்,வெங்கடேசன், காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்க தலைவர் A.S.முத்து செல்வன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் V.S.ராமகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் யுவராஜ் மற்றும் திமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.


.jpg)
No comments
Thank you for your comments