Breaking News

விருத்தாசலத்தில் இந்திய குடியரசு கட்சி சார்பில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

விருத்தாசலத்தில் இந்திய குடியரசு கட்சி சார்பில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரை சந்திப்பில் இந்திய குடியரசு கட்சி சார்பில் மத்திய, மாநில அரசுகளை 10அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் புதுடில்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பாபா சாஹிப் அம்பேத்கர் பெயரை சூடட்ட கோரியும், தமிழ்நாடு அரசு துறையில் எஸ்.சி ,எஸ்.டி, மக்களுக்கு ஒதுக்கப்பட்டு நிரப்பப்படாத காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்

பட்டியலின மக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை விரைந்து மீட்டுக் கொடுக்க வேண்டும்ஆணவ படுகொலையை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் ,

🔥 இராணி மேரி கல்லூரியை இடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார் அம்மையார் ஜெயலலிதா   🔥 நான் இந்த நேரத்தில் அரசியல் எல்லாம் பேச விரும்பவில்லை, அது தேவையும் இல்லை  🔥 பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

ஒடிசா மாநிலத்தில் ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரமாக்குவது போன்று தமிழக அரசும் தூய்மை பணியாளர்களையும் நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விருத்தாசலம் நகராட்சி பெரியார் நகர் பெயரை ஏற்க மறுக்கும் சாதி வெறியர்கள் மீது எஸ்.சி, எஸ்.எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்

விருத்தாசலம் கல்லூரியில் எஸ்.சி, எஸ்,டி, மாணவிகளுக்கான புதிய விடுதியினை கட்டித் தரவும், விருத்தாசலம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தவும், சாத்துக்குடல் சாலையை சீரமைக்க, வேண்டும்

வீடு அற்ற ஏழை எளிய ஆதி திராவிட மக்களுக்கு இலவச மனை பட்டா உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் கடலூர் மேற்கு மாவட்டத் தலைவர் கதிர்வேல் தலைமையில் நடைபெற்றது

இதில் கணேசன், ஆறுமுகம், செனாப், கண்ணன், ராமையன் அலிபாபு சுரேஷ்குமார் உள்ளிட்டோர் ஆகியோர் முன்னிலையில் மாநில பொதுச் செயலாளர் பிரபு, மாநில இணை பொது செயலாளர் மங்காபிள்ளை, மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர் இதில் சிறப்பு அழைப்பாளராக இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் செ. கு. தமிழரசன், தலைமை உரையாற்றினார் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, நிர்வாகிகள் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்

மாநிலத் தலைவர் சே கு தமிழரசன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தபோது, 

பஞ்சமி நிலங்களையார் யார் வைத்திருப்பது என்பதை அறிந்து அதனை பஞ்சமி நிலத்திற்குரிய எஸ்.சி ,எஸ்.டி, மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்இதற்காக அமைக்கப்பட்ட ஆணையம் செயல்படுகிறதா என்று தெரியவில்லை, தமிழக முதல்வர் தேர்தல் அறிக்கையில் கூறியது போல் தமிழக முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் எஸ்.சி.எஸ்.டி.பிரிவினருக்கு ஒதுக்கிய  வேலை வாய்ப்புகளைகண்டறிந்து அந்த வேலை வாய்ப்புகளை நிரப்பப்படும் என்று கூறிய உறுதியை தமிழக முதல்வர் நிறைவேற்ற வேண்டும்,இல்லை எனில் சென்னையில் மாபெரும் மக்கள் சக்தியை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் எனவும்   விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள வீதிக்கு டாக்டர் அம்பேத்கர் பெயரை இந்த நகராட்சி வைக்க வேண்டும் இல்லையெனில் மாபெரும் போராட்டத்தை நடத்திஅதனை நாங்கள் எழுதுவோம் இதற்கு ஒத்துழைக்காத காவல்துறை நகராட்சி தலைவர் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் நகராட்சி தலைவரை நீக்க போராட்டங்களை நடத்துவோம் எனவும்கூறினார்.


No comments

Thank you for your comments