ஒரே நாளில் போக்சோ, குண்டர் சட்டத்தில் ஆறு நபர்கள் கைது
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையரகத்தின் பகுதியில் இன்று ஒரே நாளில் குண்டர் சட்டத்தில் ஆறு நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்
இதில் வட மாநிலத்தைச் சேர்ந்த இருவரும் மற்றும் அம்பத்தூர் திருவேற்காடு பகுதிகளை சேர்ந்தவர்கள் இதில் ஜான் பஷ்வான் சவுத்ரி (23) பாட்னாவை சேர்ந்தவர் ஜிஷாப் ஷோரன்(36) மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் இவர்களை W-34 எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்திலும் மற்றும் காந்தி (30) அம்மன் நகர் ஒரகடம் அம்பத்தூர் மணிகண்டன் (29) அழகேசன் நகர் அம்பத்தூர் ஜெயக்குமார் (எ)ஜெய் (33) ஹவுசிங் போர்டு அயப்பாக்கத்தை சேர்ந்தவர்...
இவர்களை டி1 அம்பத்தூர் காவல் நிலையத்திலும் கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட பிரகாஷ் லால் 29 மாதா கோவில் தெரு சின்ன கோலடி திருவேற்காடு இவரை திருவேற்க்காடு காவல் நிலையத்திலும் கைதுசெய்து இவர்கள் மீது குற்றங்களை தடுக்கும் வகையாக ஆறு பேர் மீதும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
மேலும் இதுவரை ஆவடி காவல் ஆணையரகத்தில் மொத்தம் 159 நபர்களை குண்டர் சட்டத்தில் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

No comments
Thank you for your comments