பால் விலை உயர்வை கண்டித்து மாங்காடு, படப்பை, ஸ்ரீபெரும்புதூர், பகுதிகளில் பாஜக வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ஸ்ரீபெரும்புதூர்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பால்விலை உயர்வு, மின்கட்டண உயர்வு,சொத்துவரி உயர்வு உள்ளிட்டவைகளை கண்டித்து தமிழக அரசுக்கு எதிராக பாஜக வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குன்றத்தூர் ஒன்றியம் மாங்காடு பகுதியில் மாவட்ட பொது செயலாளர் ஓம்சக்தி செல்வமணி தலைமையிலும் சுங்குவார்சத்திரம் பகுதியில் மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு தலைமையிலும் படப்பையில் குன்றத்தூர் மண்டல தலைவர் அமர்நாத் தலைமையிலும் நகர தலைவர் பரத் தலைமையில் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்பாட்டத்தில் பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, தேர்தல் வாக்குறுதிபடி குடும்ப பெண்களுக்கு 1000 ரூபாய் தராததை கண்டித்து கண்டன முழுக்க முழக்கங்களை எழுப்பினர்.
இதில் பாஜக மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் நகர பாஜக நிர்வாகிகள் ஊடக பிரிவு கண்ணன், நகர மீனவர் அணி கபாலி,நகர செயலாளர் ஜெகதிஷ், உட்பட பாஜக வினர் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்.



No comments
Thank you for your comments