Breaking News

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக இளைஞரணி ஆலோசனை கூட்டம்

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக இளைஞரணி ஆலோசனை கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.




காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட இளைஞர் அணி கூட்டம் காஞ்சிபுரம் டி.கே.நம்பி தெருவில் உள்ள கலைஞர் பவள விழா மாளிகை மாவட்ட கழக அலுவலகத்தில்  காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் நடைபெற்றது 

👆 10% இடஒதுக்கீட்டால் என்னென்ன ஆபத்து?..
அனைத்து கட்சி கூட்டத்தில் பட்டியலிட்ட
முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர்-உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் அவர்கள்  இளைஞரணி நிர்வாகிகளை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் வருகின்ற 27.11.2022 அன்று பிறந்தநாள் காணும் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழாவினை எளியோர் எழிச்சி நாள் விழாவாக சிறப்பாக கொண்டாட வேண்டும் எனவும் கழக ஆக்கப்பணிகள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம்  நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம்,மாவட்ட பொருளாளர்  சன்பிராண்ட் கே. ஆறுமுகம் , மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ப.அப்துல் மாலிக், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பி டி. ஆர் .வி .எழிலரசன், பெ மணி ,க. பால்ராஜ்,ஆ. யுவராஜ் மற்றும் ஒன்றிய நகர பேரூர் கழக இளைஞர் அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் திமுகவினர் கலந்துகொண்டனர்.

No comments

Thank you for your comments