காஞ்சிபுரத்தில் சிறப்பு புலனாய்வுப்பிரிவு தொடக்கம்
காஞ்சிபுரம், நவ.16-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் முறையாக சிவகாஞ்சி காவல் நிலையத்தில் கொடுங்குற்ற வழக்குகளை விரைவாக விசாரிப்பதற்கான சிறப்பு புலனாய்வுப்பிரிவை எஸ்பி எம்.சுதாகர் புதன்கிழமை தொடக்கி வைத்தார்.
சிறப்பு புலனாய்வுப்பிரிவை தொடக்கி வைத்து எஸ்பி சுதாகர் தெரிவித்தாவது
காவல்துறையினருக்கு சட்டம் ஒழுங்கை முறையாக பராமரிப்பது, ஊர்வலங்கள், திருவிழாக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது என்பன உட்பட பல்வேறு பணிகள் உள்ளன.
அவற்றையும் பார்த்துக் கொண்டு கொடுங்குற்ற வழக்குகளுக்கு புலன் விசாரணை செய்வதில் காலதாமதம் இருந்து வந்தது.எனவே உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படியும், காவல்துறையினருக் கான சீர்திருத்த நடவடிக்கைகளில் ஒன்றாகவும் மாவட்டத்தில் முதல் முறையாக சிவகாஞ்சி காவல் நிலையத்தில் சிறப்பு புலனாய்வுப்பிரிவு தொடக்கி வைத்துள்ளோம்.இப்பிரிவில் ஆய்வாளர் நிலையில் உள்ள ஒரு அதிகாரியின் கீழ் ஒரு உதவி ஆய்வாளர் உட்பட மொத்தம் 12 பேர் பணியாற்றுவர்.இவர்கள் கொடுங்குற்ற வழக்குகளின் விசாரணைகளை விரைந்து முடித்து தீர்வு காண்பது மட்டுமே இவர்களது பணியாகும்.
மாவட்டத்தில் முதல் முறையாக சிவகாஞ்சி காவல் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது.இப்பிரிவினரின் செயல்பாடுகளை ஆய்வு செய்து மாவட்டத்தில் உள்ள மற்ற காவல் நிலையங்களுக்கும் இப்பிரிவு தொடங்க ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் எஸ்பி.எம்.சுதாகர் தெரிவித்தார்.
முன்னதாக சிவகாஞ்சி காவல் ஆய்வாளர் விநாயகத்திடம் சிறப்பு புலனாய்வுப்பிரிவு தொடங்கப்பட்டதற்கான அரசு உத்தரவையும் வழங்கினார்.
இந்நிகழ்வின் போது ஏடிஎஸ்பி க்கள் வினோத்சாந்தாராம், சந்திரசேகரன், டிஎஸ்பி ஜூலியஸ் சீசர் உட்பட காவல்துறை அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனர்.




No comments
Thank you for your comments