Breaking News

வெணிசுலாவில் பிரதிஷ்டை செய்ய காஞ்சிபுரம் சங்கரமடத்தில் மகா பெரியவர் சிலை வைத்து சிறப்பு பூஜை

  • தென் அமெரிக்காவில் உள்ள வெணிசுலாவில் மகா பெரியவர் வழிபாடு மண்டபத்திற்கு பிரதிஷ்டை செய்ய காஞ்சிபுரம்  சங்கரமடத்தில் மகா பெரியவர் சிலை வைத்து சிறப்பு பூஜை.

தென் அமெரிக்காவில் உள்ள வெனிசுலா பகுதியில்  ஸ்ரீ மகா ஸ்வாமிகள் வழிபாடு மண்டபம்  பக்தர்கள் வேண்டுதலுக்கு இணங்க அமைத்திட தீர்மானிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஓம் மகா பெரியவா சத்சங்கம் டிரஸ்ட் தொடர்பு கொண்டு மகா பெரியவா சிலை வழங்கிட கோரிக்கை வைக்கப்பட்டது 


இதனைத் தொடர்ந்து டிரஸ்ட் சார்பில் இரண்டடி உயரம் உள்ள மஹாசுவாமிகள்  அமர்ந்த கோலத்தில் தயார் செய்து ஸ்ரீ ஸ்ரீ சங்கரமட பிடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சாமிகளின் பரிபூரண ஆசியுடன் காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கர மடத்தில் அதிர்ஷ்டானத்தில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு தொடர்ந்து மகா பெரியவா ஆராதனை தினத்திற்குள் 750 கோடி. மகா பெரியவா நாம  ஜெப யக்னம் செய்ய பிரார்த்தனையும் வைக்கப்பட்டது. 


தொடர்ந்து மகா பெரியவா திருவுருசிலையை செங்கல்பட்டு ஆத்தூர் பாடசாலையில் வைத்து வேத விற்பனர்களால் வேதம் பாடப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது இதில் ஓம் மகா பெரியவா சத்சங்கம் டிரஸ்டி ராமன் காஞ்சி சங்கராச்சாரியார் அனுகிரகத்துடன் வெனிசுலாவிற்கு அனுப்பி வைத்தார்.

👆 10% இடஒதுக்கீட்டால் என்னென்ன ஆபத்து?..
அனைத்து கட்சி கூட்டத்தில் பட்டியலிட்ட
முதல்வர் மு.க.ஸ்டாலின்!

No comments

Thank you for your comments