சென்னிமலை மின் நிலைய பகுதியில் நாளை மின் விநியோகம் நிறுத்தம் அறிவிப்பு
சென்னிமலை 110/11 கே.வி. துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணி வரும் 24.11.2022 வியாழக்கிழமையன்று செயல்படுத்தப் படவுள்ளதால் பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த சென்னிமலை நகர் பகுதி முழுவதும், பூங்கா நகர், பாரதி நகர், சின்ன பிடாரியூர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமரபுரி, சக்தி நகர், பெரியார் நகர், நாமக்கல்பாளையம், அரச்சலூர் ரோடு, குப்பிச்சிபாளையம், திப்பம்பாளையம், அம்மாபாளையம், அசோகபுரம், புதுப்பாளையம், இராமலிங்கபுரம், ஓரத்துப்பாளையம், அய்யம்பாளையம், கொடுமணல், சென்னிமலைபாளையம், வெப்பிலி, கே.ஜி.வலசு, பசுவப்பட்டி, முருங்கத்தொழுவு மற்றும் எம்.பி.என்.நகர் ஆகிய அனைத்து பகுதிகளிலும் காலை 09.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இதேபோன்று பெருந்துறை திங்களுர் 110/33-11 கே.வி. துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணி வரும் 24.11.2022 வியாழக் கிழமையன்று செயல்படுத்தப்படவுள்ளதால் பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த திங்களுர், கல்லாகுளம், வெட்டையன்கிணறு, கிரே நகர், பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம், தாண்டாகவுண்டண்பாளையம், சுங்ககாரன்பாளையம், சீனாபுரம் மேற்கு பகுதி மட்டும், மேட்டுர், செல்லப்பம்பாளையம், வீராச்சிபாளையம், வீராணம்பாளையம், கராண்டிபாளையம், தலையம்பாளையம், ஆயிக்கவுண்டன்பாளையம், பொன்முடி, குள்ளம்பாளையம், நெட்டசெல்லாபாளையம், கீழேரிபாளையம், சூரநாய்கனூர், பட்டகாரன் பாளையம், நெசவாளர் காலனி, மடத்துப்பாளையம், நடுவலசு, ஊத்துப்பாளையம், மல்லநாய்கனூர், ஊஞ்சப்பாளையம், ரைஸ்மில்புதூர், சி.எம்.பாளையம், எல்லப்பாளையம், கோமையன் வலசு, தாசம்புதூர், வேலாங்காடு, மானூர்காடு, மம்முட்டி தோப்பு மற்றும் ஸ்ரீநகர் ஆகிய அனைத்து பகுதிகளிலும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

No comments
Thank you for your comments