Breaking News

டெங்கு பாதித்த பகுதிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவு....

கோவை :

டெங்கு தடுப்பு நடவடிக்கையாக பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிய சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


இதையடுத்து டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை சுகாதார துறை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அனைத்து மாவட்டங்களிலும், வட்டாரம் வாரியாக பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து, அங்கு காய்ச்சல் முகாம்களை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் அருணா கூறியதாவது:அனைத்து பகுதிகளிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. டெங்கு தடுப்பு நடவடிக்கைக்கு, 1,300 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

🔥 இராணி மேரி கல்லூரியை இடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார் அம்மையார் ஜெயலலிதா   🔥 நான் இந்த நேரத்தில் அரசியல் எல்லாம் பேச விரும்பவில்லை, அது தேவையும் இல்லை  🔥 பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சுகாதார துறை அறிவுறுத்தலை தொடர்ந்து டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.

அப்பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.தினமும், ஒரு வட்டாரத்துக்கு, 12க்கும் அதிகமான முகாம்கள் நடத்தப்படுகின்றன. கோவை மாவட்டத்தில் சூலுார் வட்டாரத்தில் காய்ச்சல், டெங்கு பாதிப்புகள் அதிகம் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக, பெரியநாயக்கன்பாளையம், மதுக்கரை பகுதிகளில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இப்பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

No comments

Thank you for your comments