Breaking News

10 % இட ஒதுக்கீடு என்பது அரசியல் அமைப்பு சட்டத்தை நீர்த்துப்போக செய்கிற செயல்- விசிக தொல் திருமாவளவன்

வேலூர்: 

10 சதவீத இட ஒதுக்கீடு என்பது அரசியல் அமைப்பு சட்டத்தை நீர்த்துப்போக செய்கிற செயல். 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில்  விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று  செய்தியாளர்கள் சந்திப்பில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து, வேலூர் அண்ணா சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, 

வேலூர் கஸ்பா கன்சால்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான இடங்களில் வசிப்பவர்களை காலி செய்ய ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அவர்களின் வாழ்வாதாரத்தை கருதி இந்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். 

 மாநகராட்சி அதிகாரிகளின் பெயர் பட்டியலுடன்
 ஊழல்.. லஞ்சம்... அம்பலபடுத்தி கோஷம்...

சிஎம்சி நிர்வாகம் தற்போதுள்ள மருத்துவமனையில் இருந்து ராணிப்பேட்டையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு இருதய அறுவை சிகிச்சை பிரிவை மாற்றும் நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இதனால் இங்குள்ள ஏழை எளியவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவே புதிய மருத்துவமனையில் புதிதாக இருதய அறுவை சிகிச்சை பிரிவை தொடங்க வேண்டும். 

👆 10% இடஒதுக்கீட்டால் என்னென்ன ஆபத்து?..
அனைத்து கட்சி கூட்டத்தில் பட்டியலிட்ட
முதல்வர் மு.க.ஸ்டாலின்!

10 சதவீத இட ஒதுக்கீடு என்பது அரசியல் அமைப்பு சட்டத்தை நீர்த்துப்போக செய்கிற செயல். உயர் வகுப்பில் பின்தங்கிய சமூகமாக இருக்கிற ஏழைகளுக்கு இலவச கல்வி, கல்வி கடனுதவி, தொழில் தொடங்க கடன் உதவி உள்ளிட்டவைகளை அரசு உதவி செய்ய வேண்டுமே தவிர இட ஒதுக்கீடு அளிக்கக்கூடாது. 

10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில்  விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும். 

ராஜீவ் காந்தி கொலையில் 6 பேரை உச்ச நீதிமன்றம் அவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்துள்ளது. இது  உச்ச நீதிமன்றத்தின் தன்னிச்சையான முடிவு இது வரவேற்க வேண்டிய நிலைப்பாடு. அவர்களின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு மறுசீராய்வு மனு செய்துள்ளது.  இருப்பினும் அவர்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும். 

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் அந்த மாநில அரசுகளை மதிக்காமல் அரசியல் பேசி வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது. எடப்பாடி பழனிசாமி பாஜக. நிர்வாகி போல் செயல்படுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.


 

No comments

Thank you for your comments