நெல் கொள்முதல் நிலையம் முறையாக அமைக்கப்படவில்லை... வலுக்கும் குற்றச்சாட்டு
நீர்நிலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையம் கால்வாயை மூடி மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ளதால் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதிக்கு உட்பட்ட கம்பராசபுரம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையம் முறையாக அமைக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கம்பராசபுரம் ஊராட்சியில் நாகம்மா திருக்கோவில் அருகே கால்வாயை மூடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகளிடம் இருந்து வாங்கும் நெல்மணிகளை முறையாக பாதுகாக்கப்படவில்லை என்றும் இந்த நெல் கொள்முதல் நிலையம் ஆனது ஏரி அருகே அமைந்துள்ளதால் நெல் மூட்டைகள் நனைந்துள்ளதாகவும் அதேபோன்று ஈரப்பதம் உள்ள பகுதிகளில் மூட்டைகளை அடுக்கப்பட்டு வருவதால் நெல்மணிகள் முளைத்துவிடுகிறது அதனால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ள சாலையில் அதிக மூட்டைகளை அடுக்கி உள்ளதாகவும் விவசாயிகளிடமிருந்து பெரும் நெல்களை இயந்திரம் மூலம் மூட்டையாக தயார் செய்யும் பொழுது அதில் இருந்து வரும் உம்மிகள் வாகன ஓட்டிகள் கண்களில் படுவதால் மாற்று இடத்தை தேர்வு செய்து முறையாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல்மணிகளை பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நெல் கொள்முதல் நிலையத்தில் இருக்கும் பணியாளர்களிடம் கேட்ட பொழுது நெல் கொள்முதல் நிலையத்திற்கு முறையாக தார்பாய்கள் வழங்கப்படவில்லை என்றும் ஆகையால் விவசாயிகளிடமிருந்து தார்ப்பாய்களை பெற்றுக் கொண்டு மூடுவதால் மழையில் நெல் மூட்டைகள் நினைந்து வருவதாகவும் அதேபோன்று ஈரப்பதம் உள்ள பகுதிகளில் மூட்டைகள் அடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
ஆகையால் நெல் மூட்டைகளில் இருந்து நெல்மணிகள் முளைத்து மூட்டைகள் வெளியே காணப்படுவதால் முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
No comments
Thank you for your comments