விதிமுறையை மீறி மது விற்பனை..!
நாமக்கல், அக்.3-
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், புதுச்சத்திரம், நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அரசு விதிமுறையை மீறி காந்தி ஜெயந்தி தினமான நேற்று நடைபெற்று வரும் மது விற்பனையை தடுக்க காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
குறிப்பாக ராசிபுரம் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், பகுதிகளில் உள்ள அரசு மதுபான கடை பார்கள், உடுப்பம் சாலையில் உள்ள மதுபான கடைக்கு வெளியே உள்ள சந்து பகுதிகளில் மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது.
No comments
Thank you for your comments