நகர தூய்மை குறித்த கையால் எழுதப்பட்ட கடிதங்கள் அனுப்பும் நிகழ்வு
உலக அஞ்சல் தினம் 2022 முன்னிட்டு சேலம் 34 வது கோட்டத்தில் உள்ள 4500 வீடுகளில் வசிப்போருக்கு ஒரே நேரத்தில் எனது குப்பை எனது பொறுப்பு... நகர தூய்மை குறித்த கையால் எழுதப்பட்ட கடிதங்கள் அனுப்பும் நிகழ்வு மாநகராட்சி கவுன்சிலர் ஈசன் இளங்கோ MC. அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் அருணாச்சலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
உடன் சௌடேஸ்வரர் பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன், சமூக ஆர்வலர் குணசேகரன், நரசிம்மன், மனோகரன், சுதாகர், தரணிதரன், ஈசன் எழில் விழியன், ஈசன் ஓம் குமார், மனோஜ் குமார், பாலாஜி, அப்பாஸ், ராஜசேகர், அம்மாபேட்டை அஞ்சல் அதிகாரி சாந்தா சீலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments