காஞ்சிபுரத்தில் திருக்கோயில் தெப்பக்குளங்களில் மழைநீரை சேகரிக்க அதிகாரிகள் ஆய்வு
காஞ்சிபுரம்,அக்.17-
காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோயில்களின் தெப்பக்குளங்களில் மழைநீரை சேகரிக்க மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் திங்கள்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் திருக்கோயில்களை ஒட்டி தெப்பக்குளங்களும் இருந்து வருகின்றன. இவற்றில் பல தெப்பக்குளங்கள் மழைநீர் வழிந்து தெப்பக்குளத்திற்கு செல்லும் வகையில் வழிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்ததால் தெப்பக்குளங்கள் பலவும் வறண்டு காணப்பட்டன.
இந்த நிலையில் திருக்கோயிலுக்கு அருகில் உள்ள தெப்பக்குளங்களில் மழைநீரை நிரப்பிட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான மங்கள தீர்த்தக்குளம், உலகளந்த பெருமாள் கோயில் அருகில் உள்ள தெப்பக்குளம் மற்றும் ரங்கசாமி குளம் ஆகியனவற்றையும் மேட்டுத்தெரு கால்வாய் வழியாக மழைநீர் செல்லும் பாதைகள் ஆகியனவற்றை ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது மாநகராட்சி மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ், ஆணையாளர் ஜி.கண்ணன், பொறியாளர் கணேசன், மண்டலத் தலைவர் சாந்தி சீனிவாசன், மாநகர் மன்ற உறுப்பினர்கள் எஸ்.கே.பி. கார்த்திக், சுரேஷ், சுப்பராயன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
.jpg)


No comments
Thank you for your comments