Breaking News

உண்டு உறைவிடப் சிறப்பு பள்ளியில் தீபாவளியை முன்னிட்டு குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கல்

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் ஒன்றியத்தில் உள்ள விசூர் ஊராட்சியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் சார்பில்   பள்ளி செல்லா பள்ளி இடைநின்ற குழந்தைகளுக்காக நடைபெற்றுவரும் பாரதியார் உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி பள்ளியில் தீபாவளி முன்னிட்டு மாணவிகளுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பெற்றோர் கூட்டம் நடைபெற்றது. 


இந்நிகழ்விற்கு குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் உதவி பொது மேலாளர் மோகனவேல் தலைமை தாங்கினார். 


ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் வட்டார வள மைய மேற்பார்வையாளர் செந்தில்முருகன், விசூர் ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி வார்டு உறுப்பினர் ஜானகிராமன் மேலாளர்கள் கீதா,  ராகவன் பொன்னு வேல் ஏழுமலை விசூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

முன்னதாக பாரதியார் உண்டு உறைவிடப்பள்ளி பொறுப்பாளர் திலகவதி வரவேற்புரை ஆற்றினார்.


உத்திரமேரூர் வட்டார கல்வி அலுவலர் தண்டபாணி கலந்து கொண்டு குழந்தைகளுக்கு புத்தாடைகளை வழங்கி தீபாவளி திருநாள் குறித்து சிறப்புரையாற்றினார் 

ஆசிரியர்கள் வள்ளி, ஜெனிஸ் மகாலட்சுமி தயாளன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உறைவிடப் பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

இதேபோன்று காஞ்சிபுரம் ஒன்றியம் சிறு காவேரிப்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்று வரும் பூங்காவனம் உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி மையத்தில் முதுநிலை திட்ட மேலாளர் தூயவன் தலைமையில் மாணவர்களுக்கு புத்தாடைகளை வழங்கி சிறப்பித்தனர். 


திட்ட மேலாளர்கள் சுரேஷ்குமார், நிஷ்யா  சூரியகலா  செல்வம் ஆசிரியர்கள் சிலம்பரசன் பார்த்திபன் மணிகண்டன் அருண்குமார் உள்ளிட்ட களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

இந்த உண்டு உறைவிடப் பள்ளியில் பயின்று பின்னர் முறையான பள்ளியில் சேர்க்கப்பட்டு கல்லூரிப்படிப்பை முடித்து வேலையில் உள்ள மாணவர்கள் சரவணன் உதயன் அமுல் கற்பகம் சர்மிளா ஆகியோர் பள்ளியில் பயின்று இன்று நல்ல நிலையில் உள்ளதை மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.  

மாணவர்களுடைய கலை நிகழ்ச்சிகள் மற்றும் யோகா கராத்தே போட்டிகள் நடைபெற்றது.

No comments

Thank you for your comments