Breaking News

ஒலி ஒளி காட்சி மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

காஞ்சிபுரம் கீழம்பியில் உள்ள திருமலை பொறியியல் கல்லூரியில், மாவட்ட ஆட்சியர் காஞ்சிபுரம் மற்றும் சென்னை தெற்கு சரக இணைப்போக்குவரத்து ஆணையர்  ஜெயசங்கரன் ஆகியோர்களின் உத்தரவின் பேரில்   பள்ளி மற்றும் கல்லூரி  வாகன ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (13.10.2022) நடத்தப்பட்டது. 



அதில் காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன் அவர்களின் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்   பன்னீர்செல்வம், பள்ளி பேருந்து ஒட்டுனரகள் சுமார் 200 நபர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பான பள்ளி பேருந்து பயணம் குறித்து ஒலி ஒளி காட்சி மூலம் தொண்ணூறு நிமிடம் விளக்கவுரை நிகழ்த்தினார்.  


இந்நிகழ்வில் குழந்தைகளை எப்படி பாதுகாப்பாக பள்ளிபேருந்தில் அழைத்து செல்வது, அதிகவேகம், மது அருந்தி வாகனம் ஒட்டுதல், செல்போன் பேசியபடி வாகனம் ஒட்டுதல், கை சைகைகள், போக்குவரத்து சின்னங்கள் போன்ற தலைப்புகள் குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது. 



இதில் பாலு செட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.நித்தியானந்தம் மற்றும் யங் இன்டியன்ஸ் சேர்மன் பிரசன்னா கமலேஷ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். யங் இன்டியன்ஸ் குழு மற்றும் திருமலை பொறியியல் கல்லூரி இணைந்து  விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

 

No comments

Thank you for your comments