இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வியாபாரம் சூடு பிடித்தது... மகிழ்ச்சியில் வியாபாரிகள்
காஞ்சிபுரம் :
நவராத்திரி விழாவில், ஒரு பகுதியாக இருக்கும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விழாவானது நாடு முழுவதும் வரும் செவ்வாய் மற்றும் புதன் ஆகிய நாட்களில் கொண்டாடப்பட உள்ளதால், காஞ்சிபுரம் பகுதியில் பொருட்களை வாங்க பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் ஏராளமானோர் குவிந்துள்ளனர்.
ஆயுத பூஜைக்கு பொறி, பூ, பழம் உள்ளிட்ட பொருட்களை வாங்க காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் பகுதி, பூக்கடை சத்திரம் பகுதி ஆகிய இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்துள்ளனர்.
ஆயுத பூஜை முன்னிட்டு கடந்த ஆண்டு விட பல மடங்கு உயர்ந்த பூக்களின் விலை, மல்லி, முல்லை, சாமந்தி ஆகிய பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக கட்டுப்பாட்டுடன், கடைகள் இயங்கி வந்த நிலையில் தற்போது, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒரே நேரத்தில் பூக்கடை சத்திரம் மற்றும் ராஜாஜி மார்க்கெட் பகுதியில் குவிந்த பொருட்களை வாங்குவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி.
பொருளாதாரம் முடக்கம் காரணமாக வியாபாரிகளும் பெரும் அளவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஆயுத பூஜையை பெரிய அளவில் கொண்டாடாமல் இருந்த நிலையில் இந்த வருடம் பெரிய அளவில் கொண்டாட வியாபாரிகள் முடிவு செய்துள்ளதால், அதிகளவு வியாபாரம் நடப்பதாக, கடை உரிமையாளர்கள் சந்தோஷமாக தெரிவித்துள்ளனர்.
No comments
Thank you for your comments