Breaking News

பாரம்பரிய உணவு வகைகள் கருத்தரங்கும் மற்றும் விவசாயிகள் மேளா

காஞ்சிபுரம்:

உள்ளூர் ரகங்களை பிரபலப்படுத்துதல் கண்காட்சி 26.10.2022 அன்று மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில் பாரம்பரிய பயிர்கள் சாகுபடி  மற்றும் பாரம்பரிய உணவு வகைகள் குறித்த கருத்தரங்கும் மற்றும் விவசாயிகள் மேளா நடைபெற உள்ளது.  இந்த விவசாயிகள் மேளாவினை மதிப்பிற்குரிய காஞ்சிபுரம், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து தலைமை உரை ஆற்ற உள்ளார்கள். 

மேலும், விவசாயிகள் மேளாவில் தமிழ்நாடு அரசு வேளாண்மைப்பல்கலைக்கழக  விஞ்ஞானிகள் மற்றும் வேளாண்மை - உழவர் நலத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு பாரம்பரிய நெல் சாகுபடி மற்றும் அங்கக முறை தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளின் சந்தேகத்திற்கு விளக்கம் அளிக்க உள்ளனர்.



மேலும், பாரம்பரிய நெல் சாகுபடி குறித்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் பண்டைய கால சாகுபடி குறித்த கருத்துக்காட்சி அரங்கம் விரிவான முறையில் அமைக்கப்பட உள்ளது. மேளாவில் பாரம்பரிய நெல் விதை விற்பனைசெய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 


இவ்விழாவில் விவசாயிகள் பாரம்பரிய நெல் சாகுபடி குறித்த விரிவான விளக்கம் பெற்று செல்ல மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments