Breaking News

வைரவிழா காணும் அச்சிறுபாக்கம் கிளை நூலகத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் எஸ்.எம்.ஷாஜஹான் வாழ்த்து

வைரவிழா காணும் அச்சிறுபாக்கம்  கிளை நூலகத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் எஸ்.எம்.ஷாஜஹான் வாழ்த்து தெரிவித்தார்.



 செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கத்தில் 1962 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18 ஆம் நாள் கிளை நூலகம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்ற இந்த நூலகம் தற்போது வைரவிழா காணுகிறது. வைரவிழா காணும் அச்சிறுபாக்கம்  கிளை நூலகத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் எஸ்.எம்.ஷாஜஹான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இதில் 1962-ல் அச்சிறுபாக்கம் பேரூராட்சி அலுவலகத்தின்பின்புறம் ஓட்டு கட்டிடத்தில் தொடங்கப்பட்ட இந்நூலகம் சிறப்பாக இயங்கி வந்த நிலையில் பெருமழையில் நூலகம் அருகில் இருந்த ஒரு மரம் ஓட்டு கட்டிடத்தில் விழுந்த நிலையில்  அச்சிறுபாக்கம் மார்வார் அரசினர் மேல்நிலைப்பள்ளி எதிரில் தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் தொடர்ச்சியாக இயங்கத் தொடங்கியது 

பின்னாளில், நூலகம் அச்சிறுபாக்கம் நடுத்தெருவில் பல காலமாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது போதிய இடவசதி இன்றி  நூலகத்தை விரிவுபடுத்த முடியாமல் இருந்து வந்தது இதனால் நூலக வாசகர்கள் மாணவர்கள் பொதுமக்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகி வந்தனர்.


50 ஆண்டு காலமாக வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிற கிளை நூலகத்திற்கு என்று சொந்த கட்டிடம்  வேண்டும் என சமூக ஆர்வலர்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அச்சிறுபாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகம் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது

கடந்த 2005 ஆம் ஆண்டு சட்டமன்ற தொகுதிகளின் மறு வரையறை (மறு சீரமைப்பு) -க்கு பிறகு அச்சிறுபாக்கம் தொகுதி பெயர் நீக்கப்பட்டு மதுராந்தகம் சட்டமன்ற ( தனி ) தொகுதியில் சேர்க்கப்பட்டது.

அதனால் அச்சிறுபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் பல ஆண்டுகள் உபயோகப்படுத்தாமல் இருந்தது அந்த கூடுதல்  கட்டிடத்தை கிளை நூலகத்திற்கு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினர் நெல்லிக்குப்பம் புகழேந்தி அவர்களிடம் கேட்டுக் கொண்டனர் சட்டமன்ற உறுப்பினரும் மறுப்பு ஏதும் கூறாமல் உடனடியாக சம்மந்தப்பட்ட துறைக்கு கடிதம் அளித்தார். மாவட்ட ஆட்சியருக்கும் கோரிக்கை முன்வைத்தார்.



 இந்நிலையில் அன்றைய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுப் பணித்துறைக்கு பல ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கும் அலுவலகத்தை பொது நூலகத்திற்கு வழங்க  பரிந்துரை கடிதம் அனுப்பினார் அதனை தொடர்ந்து இடைவிடாத போராட்டங்களுக்கு பிறகு  அக்கட்டிடம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்து செங்கல்பட்டு மாவட்ட நூலக ஆணைக்குழு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு நூலக ஆணைக் குழுவின் கட்டுப்பாட்டில் வந்தது அச்சிறுபாக்கம் நடுத்தெருவில் இயங்கிவந்தது இந்த நூலகத்தின் துவக்கம் தொடங்கி 2021, நவம்பர் மாதம் வரை இந்த நூலகத்திற்கு என்று சொந்த கட்டிடம் இல்லாமல் வாடகை கட்டடத்தில் இயங்கி வந்தநிலையில் தற்பொழுது அச்சிறுபாக்கத்தில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் அருகில் உள்ள பழைய சட்டமன்ற உறுப்பினர் அலுவலக கட்டிடம்  நூலகத்தின் சொந்த கட்டிடமாக மாற்றப்பட்டு நூலகம் செயல்பட்டு வருகிறது

தற்போது கிளை நூலகத்தில் 40 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட நூல்கள் உள்ளன. 3700 பதிவு பெற்ற வாசகர்கள் உள்ளனர். நூலகத்திற்கு தினசரி நாளிதழ்களை படிக்க வரும் வாசகர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் மேற்பட்டதாகும். குறிப்பாக மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் கணினி வசதியும் செய்யப்பட்டுள்ளது.

நூலகத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் வகையில் செயல்பட்டு வரும் அச்சிறுபாக்கம் பகுதி சமூக ஆர்வலர்கள் வாசகர் வட்டம் ஏற்படுத்தி சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

வாசகர் வட்டத்தின் தலைவர் திரு தேவராஜன் (HOD) அவர்கள் தன் சொந்த நிதியிலிருந்து 8 லட்சம்  ரூபாய் மதிப்பில் ஒரு கட்டிடத்தை நூலக வளர்ச்சிக்காக  கட்டித்தந்துள்ளார்  

கிளை நூலகர் ப.ஜெயகாந்தன் பதிவரை உதவியாளர் வீ.செந்தில்வேல் ஆகியோர் தற்போது மிகச் சிறப்பாக இந்த நூலகத்தை வழிநடத்தி வருகின்றனர்  இந்த நூலகத்தின் வளர்ச்சிக்காக சுமார் 50க்கும் மேற்பட்ட நன்கொடையாளர்கள் புரவலர் மற்றும் பெரும் புரவலர் திட்டங்கள் வழியே நன்கொடை வழங்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருகிறது

வைரவிழா காணும் அச்சிறுபாக்கம் கிளை நூலகம் மென்மேலும் சிறப்பாக செயல்பட்டு பல நூற்றாண்டுகள் காண நெஞ்சம் நிறைந்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து ள்ளார்.

No comments

Thank you for your comments