விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு ஊக்குவிப்பு நிகழ்ச்சி
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் திருவாணைக்கோவில் அடுத்துள்ள சிதண்டி மண்டபம் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் வட்டார அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு ஊக்குவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது .
கலாம் மக்கள் இயக்கம் நிறுவனர் டாக்டர் என் கார்த்தி கேயன் அவர்கள் தலைமையில் APJ டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் 91வது பிறந்த நாளை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு பரிசு வெண்ணாங்கு பட்டு சிதண்டி மண்டபம் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் வட்டார அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் சிதண்டி மண்டபம் அரசினர் உயர்நிலைப் பள்ளியின் மாணவ மாணவிகள் விளையாட்டு போட்டிகளில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் 100மீட்டர் ஓட்டப் பந்தயம் கபடி ஹாக்கி பேட்மிட்டன் ரன்னர் 200 மீட்டர் மாணவிகள் ஓட்டப் பந்தயம் 200 மீட்டர் மாணவர்கள் ஓட்டப் பந்தயம் அனைத்து போட்டிகளிலும் கலந்து கொண்டு சிதண்டி மண்டபம் அரசினர் உயர்நிலைப்பள்ளியின் மாணவ மாணவிகள் வட்டார் அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் சிறப்பாக விளையாடி பல பரிசுகளை வாங்கி பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
அவர்களை ஊக்குவிக்கும் விதமாக டாக்டர் கலாம் மக்கள் இயக்க நிறுவனர் டாக்டர் என் கார்த்திகேயன் அவர்கள் சிறந்த சமூக சேவகரான அவர் மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் மற்றும் திருக்குறள் புத்தகம் அனைத்து மாணவர்களுக்கும் அளித்து அவர்கள் இயக்கம் சார்பாக மாணவர்களை ஊக்குவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சமூக சீர் கேடுகளை ஏற்படுத்தி வரும் போதை பொருள் விழிப்புணர்வு மாணவ மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது மேலும் டாக்டர் என் கார்த்திகேயன் மற்றும் கலாம் இயக்கத்தில் உள்ள அனைத்து சகோதர உறவுகள் மற்றும் வழங்கறிஞர் சக்கரபாணி மரம் இரமேஷ் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி மாணவர்கள் அனைவரும் போதை பொருள் விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
மேலும் இந்நிகழ்சியில் வழக்கறிஞர் சக்கரபாணி சிறப்புரை ஆற்றினார்.

.jpg)

No comments
Thank you for your comments