அனைத்து துறைகளிலும் முறைகேடு... திமுக அரசை கண்டித்து அமமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
அனைத்து துறைகளிலும் முறைகேடு, மின் கட்டண உயர்வு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து காஞ்சிபுரத்தில் அமமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் மொளச்சூர் இரா.பெருமாள் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தமிழக அரசுத்துறைகள் தோறும் அதிகரித்து வரும் முறைகேடுகள், மக்களைப் பாதிக்கும் மின் கட்டண உயர்வு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றுதல், அமைச்சர்களின் அடாவடி பேச்சு உள்ளிட்ட திமுக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளைக் கண்டித்து அமமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்திருந்தார்.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரத்தில் தாலுக்கா அலுவலகம் எதிரே நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் மொளச்சூர் இரா.பெருமாள் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமான அமமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு மின் கட்டண உயர்வு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றுதல், அமைச்சர்களின் அடாவடி பேச்சு உள்ளிட்ட திமுக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளைக் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அமமுக காஞ்சிபுரம் ஒன்றிய செயலாளர்கள் வேளியூர் எம்.தனசேகரன், கூரம் ட.பச்சையப்பன், கே.ரஜினி குமாரவடிவேல், பகுதி செயலாளர்கள் அசோக்குமார், பார்த்தசாரதி, கார்த்திகேயன், சீனிவாசன் மற்றும் நிர்வாகிகளும் ஏராளமான தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments