Breaking News

விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்... மானியத்துடன் கூடிய கடன் வழங்கல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் இன்று விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா. ஆர்த்தி, இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் இன்று விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா. ஆர்த்தி, இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் இன்று(28.10.2022) நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் இந்தகூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை திட்டங்கள் தொடர்பாக அறிவுரைகள் விவசாயிகளுக்கு வழங்கினர்.மேலும் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.

இன்று நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் 22 விவசாய பயனாளிகளுக்கு 19 லட்சத்து 62ஆயிரத்து 875ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா. ஆர்த்தி,இ.ஆ.ப. அவர்களால் வழங்கப்பட்டது.

வேளாண்மை துறை சார்பில் இரு நபர்களுக்கு இடுபொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டது. வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் பாரத பிரதமர் அவர்களின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்கள் தொடங்குவதற்கு மானியத்துடன் கூடிய கடன் தொகை வங்கிகள் மூலம் ஐந்து நபர்களுக்கு 16 லட்சத்து 31 ஆயிரத்து640 ரூபாய் திட்ட மதிப்பில் சிறு நிறுவனங்கள் தொடங்க கடன் வழங்கப்பட்டது .



இதில் அரசு மானியமாக 5 லட்சத்து 34ஆயிரத்து 100ரூபாய் வழங்கப்பட்டது. 9 பயனாளிகளுக்கு உழவர் சந்தை அடையாள அட்டை வழங்கப்பட்டது.கூட்டுறவு துறை சார்பில் ஐந்து பயனாளிகளுக்கு ரூபாய் 3 லட்சத்து 30 ஆயிரத்து 737 ரூபாய் பயிர் கடன் வழங்கப்பட்டது.


 


இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. கோ.சிவருத்ரய்யா அவர்கள் மற்றும் அனைத்து துறை அரசு உயர் அலுவலர்கள் மற்றும் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.


 


 


 


வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம்.

No comments

Thank you for your comments