Breaking News

பாரம்பரிய உணவுத் திருவிழா

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலம் பாரம்பரிய உணவுத் திருவிழாவினை உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க சுந்தர் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கோ சிவருத்ரய்யா ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.



குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகம் மூலம் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் பாரம்பரிய நெல் கேழ்வரகு கம்பு திணை மக்காச்சோளம் போன்ற பாரம்பரிய உணவு பொருட்களைக் கொண்டு சமைத்த சத்தான உணவுப் பொருட்கள். மற்றும் சத்தான பழங்கள்  மூலிகை உணவு போன்றவற்றை வைத்து உணவு பொருட்கள் கண்காட்சி அமைக்கப்பட்டது.

இக்கண்காட்சி சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் பார்வையிட்டனர் மேலும் புகையில்லா சமையல் போட்டியில் வெற்றி பெற்ற தாய்மார்களுக்கு பரிசளித்தார்.

பின்னர் சட்டமன்ற உறுப்பினர்  பேசியதாவது, நாம் பாரம்பரிய உணவு வகைகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டும் இயற்கை தானியங்கள் நாம் சாப்பிடுவதால் உடலுக்கு எந்த வித தீமைகளும் கிடையாது. மேலும் இது போன்ற இயற்கை உணவுகளை உண்பதால் உடலில் நோய் சக்தி எதிர்ப்பு அதிகரிக்கிறது.

இவ்உணவு திருவிழா கிராமங்கள் அளவிலும் நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் திரு தேவேந்திரன் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் திருமதி கிருஷ்ணவேணி உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் அனுராதா குழந்தைக்கு வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி மோனிஷா வெங்கடேசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments