Breaking News

சேலம் மாவட்ட முத்தமிழ் சங்கம் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கல்

சேலம் மாவட்ட முத்தமிழ் சங்கம் சார்பில்  தமிழ் சங்கம் மண்டபத்தில்  2021-22 கல்வி ஆண்டில் பொதுத் தேர்வில் தமிழக அளவில் தமிழ் பாடத்தில் இரண்டாம் இடமும் மாவட்ட அளவில் முதலிடமும் பெற்ற சிறந்த மாணவ மாணவிகளுக்கு மற்றும்  10, 12ம் வகுப்பு சேர்ந்த 25 மாணவர்களுக்கு  ரூ.50,000  பரிசுத்தொகையும் மற்றும் சான்றிதழும் கேடயமும் வழங்கினார்கள்.


சிறந்த ஆசிரியை ஆசிரியர்களுக்கான விருது வழங்கும் விழாவில் பொன் சந்திரன்,  ஜெ கோவிந்தராஜ் தலைமையில் சிறப்பு விருந்தினர்கள்  தமிழரசு முன்னாள் எம்எல்ஏ. மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பி எஸ் எஸ் சீனிவாசன், வி கார்த்திகேயன், கா சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி சிறப்பித்தனர்.



No comments

Thank you for your comments