Breaking News

50 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் கடைகள், இருசக்கர வாகனங்கள் சேதம்

🔥காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தொடர் மழையின் காரணமாக 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில்  விழுந்ததில் 5 கடைகள் மற்றும் 3இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. மேலும் 5மணி‌ நேர போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டது. 

🔥சாலையில் விழுந்த மரத்தை அப்புறபடுத்தும் பணியில்  தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

🔥காஞ்சிபுரம்-வந்தவாசியில்  போக்குவரத்து பாதிப்பின் காரணமாக‌ போக்குவரத்து மாற்றம்


காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக விட்டு விட்டு கனமழையும்,மிதமான‌ மழையும் காணப்பட்டு வருகிறது.இந்த நிலையில் நேற்று நள்ளிரவிலே முதலே காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு‌ சில இடங்களில் கனமழையும் மேலும் ஒரு சில இடங்களில் மிதமான மழைபொழிவும் காணப்பட்டது.


இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் 50 ஆண்டுகள் பழமையான புளிய மரமானது அதிகாலை‌ வேரோடு சாய்ந்து சாலை மற்றும் கடையின் மேற்கூரை முன்பு விழந்துள்ளது. இதன் காரணமாக அருகில் இருந்த 3 இருசக்கர வாகனங்கள், 5 கடைகள் முன் பகுதி சேதம் அடைந்துள்ளது.


இது குறித்து தகவல் அறிந்து வந்த காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினர் உடனடியாக வேரோடு சாய்ந்த மரத்தினை இயந்திரங்கள் உதவியோடு வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதன் காரணமாக காஞ்சிபுரம்-வந்தவாசி முக்கிய சாலையின் வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் ஒரிக்கை வழியாக  போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இருசக்கர வாகனங்கள் மட்டுமே சாலையின் ஓரமாக சென்று வரும் நிலையில் 5மணி நேரமாக அப்பகுதியில் நான்கு சக்கர வாகனங்கள்‌ மற்றும் பேருந்துகள் செல்லாது போக்குவரத்து பாதிப்பானது ஏற்பட்டுள்ளது.

இந்த மரம் விழும்போது அருகில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

No comments

Thank you for your comments