ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை.. 48 மணி நேரத்தில் 1310 ரவுடிகள்
சென்னை :
தமிழகத்தில் நேற்று நடந்த ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டையில் 133 முக்கிய ரவுடிகள் பிடிபட்டனர்.
இதில் கொலை, கொள்ளை வழக்குகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 15 பேர், முக்கிய ரவுடிகள் 13 பேரும் சிக்கினர். இந்த 13 ரவுடிகள் பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தவர்கள் ஆவர் என காவல்துறை தெரிவித்தது.
இந்நிலையில், ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை மூலம் தமிழகம் முழுவதும் கடந்த 48 மணி நேரத்தில் 1,310 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் 221 ரவுடிகள் தலைமறைவு குற்றவாளிகளாக இருந்தவர்கள்.
இதில் 110 பேர் மீது பிடி ஆணைகள் நிலுவையில் இருந்தன என காவல்துறை தெரிவித்துள்ளது. பிடிபட்ட மேலும் 979 ரவுடிகளிடம் நன்னடத்தை உறுதிமொழி பெறப்பட்டது.
அவர்கள் அதை மீறினால் 6 மாதம் சிறையில் அடைக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments