கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றபோது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு
காஞ்சிபுரம்
ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் ஓட்டலில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய, ஒரே கிராமத்தில் இருந்த சென்ற மூவர் விஷவாய்வு தாக்கி பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கழிவு நீர் தொட்டியில் இருந்து கழிவு நீரை வெளியேற்றி பல மணி நேரம் போராடி மூவரது உடல்களையும் தீயணைப்பு துறையினர் மீட்டெடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள சத்தியம் கிராண்ட் எனும் பிரபல தனியார் ஓட்டலில், கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் கட்சிப்பட்டு பகுதியை சேர்ந்த ரங்கநாதன் 51, நவீன்குமார் 30, திருமலை 18 ஆகிய மூவரும் ஈடுபட்டிருந்த போது விஷவாயு தாக்கி சுமார் 30அடி ஆழம் கொண்ட கழிவுநீர் தொட்டியின் உள்ளேயே மூச்சு திணறல் ஏற்பட்டு விழுந்து சிக்கிக்கொண்டனர்.
இது குறித்து தகவலறிந்து அங்கு விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கழிவு நீர் தொட்டியில் இருந்து சுமார் 15அடி அளவிற்கு கழிவு நீரை முதல்கட்டமாக இறைத்தனர்.அப்போது மூவரும் கழிவு நீரின் சகதியிலேயே சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது தெரியவந்தது.
இதன் பின் மூவரின் உடல்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் பல மணி நேரமாக ஈடுபட்டனர்.அதன் பின் முதற்கட்டமாக நவீன்குமார், மற்றும் திருமலை ஆகிய இருவரது உடலை மட்டும் மீட்டெடுத்து அதன் பின் ரங்கனாதன் என்பரது உடலையையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
மேலும் இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி இல்லாமல் பணியில் அமர்த்தியது எந்த ஒரு உபகரனும் இல்லாமல் கழிவு நீர் தொட்டியில் இறங்கியது உயிரிழப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது.
நீதிமன்றம் ஏற்கனவே மனித கழிவுகளை மனிதர்களை அல்ல கூடாது என உத்தரவிட்டும் அதனை மீறி செயல்பட்ட மேலாளர் சத்தியமூர்த்தி மீது ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர் மேலும் ஓட்டல் மேலாளர் முரளி மற்றும் ஒப்பந்ததாரர் ரஜினி ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மீட்கப்பட்ட மூவரது உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய சென்றப்போது விஷ வாய்வு தாக்கி ஒரே கிராமத்தை சேர்ந்த மூவர் பலியான சம்பவம் கட்சிப்பட்டு கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
மேலும் ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் பகுதிகளில் தொழிற்சாலை நிறைந்த பகுதி என்பதால் பாதாள சாக்கடை வசதி இல்லாததால் கழிவுநீர் தொட்டியை அவ்வப்போது சுத்தம் செய்யும் போது பலியாவது வாடிக்கையாகியுள்ளது. இதுவரை ஏற்கனவே ஆறு பேர் பலியான நிலையில் தற்போது மூன்று பேர் உயர்ந்துள்ளனர்.



No comments
Thank you for your comments