பிரபலமாக திட்டம் போட்ட 3 வாலிபர்கள்..... முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது
கோபி:
டி.என்.பாளையம் அருகேயுள்ள கே.என்.பாளையம் தாசிரிபாளையம் ரோடு பள்ளத்தில் 3 பேர் பஸ்சின் கண்ணாடியை உடைப்பதாக பேசிக்கொண்டிருந்தனர்.
இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில் கே.என்.பாளையம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (22), சாமுண்டி (27) மற்றும் கருணா என்கிற கருணாமூர்த்தி (24) ஆகிய 3 பேர் அரசு பஸ்சின் கண்ணாடியை உடைத்தால் பிரபலமாகி விடலாம் என்று அரசுக்கு அவப்பெயரையும், பொது சொத்துக்கு சேதம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ள திட்டமிட்டதாக தெரியவந்தது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சந்தோஷ், சாமுண்டி, கருணாமூர்த்தி ஆகிய 3 பேர் மீதும் பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
No comments
Thank you for your comments