தாட்கோ கட்டட பணிக்கு இந்தாண்டு ரூ.219 கோடி ஒதுக்கீடு
தாட்கோ கட்டட பணிக்கு இந்தாண்டு ரூ.219 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஆதிதிராவிட வீட்டு வசதி மேம்பாட்டு கழகத் தலைவரும் தாட்கோ தலைவருமான மதிவாணன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட தாட்கோ அலுவலகத்தில் பயனாளிகளுக்கு டிராக்டர், வாடகை கார், ஆட்டோ, சுற்றுலா போன்ற வாகனங்கள் வாங்கவும் கடைகள் துவங்குவதற்கு 14 பயனாளிகளுக்கு என 22.87 லட்ச ரூபாய் மானியத்துடன் 77.23 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு ஆதிதிராவை வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் தலைவரும், தாட்கோ தலைவருமான மதிவாணன் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் புதியதாக கட்டப்பட்டும் ஆதிதிராவிடர் நல விடுதியை பார்வையிட்டார். உடன் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், சட்ட மன்ற உறுப்பினர்கள் சுந்தர் மற்றும் எழிலரசன் உடன் இருந்தனர்.
பின் செய்தியாளர்களை சந்தித்த மதிவாணன் தெரிவித்ததாவது,
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் புதியதாக கட்டப்படும் கல்லுாரி மற்றும் பள்ளி மாணவியரின் விடுதியின் கட்டுமான பணிகளை நாங்கள் பார்வையிட்டுள்ளோம்.
இந்த பணிகள் வரும் ஜனவரி மாதத்தோடு முடிவதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில், டிசம்பர் மாதத்திலேயே இப்பணிகளை முடிக்க இருக்கிறோம். தமிழகம் முழுதும் நடைபெறும் கட்டட பணிகள் சிறப்பாக நடைபெறுகிறது. கட்டட பணிக்காக, தமிழகம் முழுவதும் கடந்தாண்டு 200 கோடி ஒதுக்கீடு ஒதுக்கீடு செய்தார்கள்.
இந்தாண்டு 219 கோடி ரூபாய்க்கு டெண்டர் விட வேண்டியுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் 20 கோடி ரூபாய் மதிப்புக்கு மேலான பள்ளி கட்டடங்கள், விடுதிகளை வரும் 2ம் தேதி திறந்து வைக்க உள்ளார். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 6 மாவட்டங்களில் தாட்கோ மேலாளர் அலுவலகங்களையும் முதல்வர் திறக்க உள்ளார் என தெரிவித்தார்.

.jpg)


No comments
Thank you for your comments