Breaking News

2022ம் ஆண்டிற்கான காவல் பயிற்சி நிறைவு விழா

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 2022 ஆம் ஆண்டிற்கான காவல் பயிற்சி நிறைவு விழா அணிவகுப்பு விழா பாஷிங் அவுட் பரேட் 136 காவல் காருக்கான ஆறு மாத கால அடிப்படை பயிற்சி ஆவடி பயிற்சி மையத்தில் 19-10-2022 அன்று நடைபெற்றது. 


இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக திரு சந்தீப் ராய் ரத்தோர் ஆவடி காவல் ஆணையாளர் ஆவடி காவல் ஆணையரகம் அவர்கள் கலந்து கொண்டு அணாவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.


இவ்விழாவில் ஆவடி காவல் ஆணையாளர் அவர்கள் பேசும் பொழுது தேசத்திற்கான தன்னலமற்ற சேவைக்கு தங்களை அர்ப்பணித்து அனைத்து முயற்சிகளிலும் சிறந்து விளங்க பாடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார். 


பயிற்சி முழுவதும் நடத்தப்பட்டு பல்வேறு போட்டிகளில் சிறப்பான முறையில் வெற்றி பெற்ற  அதிகாரிகள் மற்றும் பயிற்சியில் ஈடுபட்டவர்களின்  பெற்றோர்களுக்கு பெருமை கூறிய பரிசுகளை விழாவில் வழங்கினார்.


இதில் திருமதி விஜயலட்சுமி இ கா ப தளவாய் பயிற்சி படை ஆவடி முதல்வர் கலந்து கொண்டார்

No comments

Thank you for your comments