Breaking News

15 வது திமு கழக தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகர நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாநகர திமுக பொது உறுப்பினர் கூட்டம் மற்றும் 15  வது கழக தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகர நிர்வாகிகள் அறிமுக கூட்டம்  அண்ணா அரங்கத்தில் மாநகர அவைத்தலைவர் கே.ஏ.செங்குட்டுவன்   தலைமையில்  நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாநகர செயலாளர் சி கே வி தமிழ்ச்செல்வன் வரவேற்புரை ஆற்றினார்..  மாநகர துணை செயலாளர்கள் ஏ.எஸ்.முத்துசெல்வம், வ.ஜெகநாதன், பி.நிர்மலா, மாநகர பொருளாளர் கு.சுப்புராயன், முன்னிலையில்  காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் அவர்கள் கலந்து கொண்டு  15 வது கழக தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகர நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து  ஆலோசனை வழங்கினார்.


இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் மாவட்ட துணை செயலாளர் க. செல்வம், கழக மாணவரணி செயலாளர் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் மாவட்ட பொருளாளர் சன்பிராண்ட் கே.ஆறுமுகம்,  

பொதுக்குழு உறுப்பினர்கள்  எஸ்.கே.பி. சீனிவாசன், செ.சிகாமணி, பகுதிச் செயலாளர்கள் கே.திலகர் எஸ் .சந்துரு ,ஆ .தசரதன், சு. வெங்கடேசன், மாநில நிர்வாகிகள் தி.அன்பழகன்ஜி. சுகுமார், வி.எஸ்.ராமகிருஷ்ணன், பெ.சுந்தரவதனம், மற்றும் மாநகர நிர்வாகிகள் வட்ட கழக நிர்வாகிகள் இளைஞரணி நிர்வாகிகள் மாணவரணி நிர்வாகிகள் ஏராளமான கழகத்தினர் கலந்து கொண்டனர். காஞ்சிபுரம் மாநகர 8 வது வட்ட கழக செயலாளர்  இ.சந்தானம் நன்றியுரை கூறினார்



No comments

Thank you for your comments