Breaking News

ஒரே மாதத்தில் ரூ.15 இலட்சம் அரசுக்கு வருவாய்... மோட்டார் வாகன ஆய்வாளர் அதிரடி...

 “ஒரே மாதத்தில் பதினைந்து இலட்சம் ருபாய் அரசுக்கு வருவாய்” காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் திரு.கா.பன்னீர்செல்வம் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.




கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் காஞ்சிபுரம் வட்டரபோக்குவரத்து அலுவலகத்தில் பணியில் சேர்ந்த கா.பன்னீர்செல்வம் மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-1 அவர்கள் வந்ததிலிருந்தே தன் பணியை செம்மையாக செய்தும், முறைகேடுகளை உடனடியாக களைந்தும் வருகிறார். 


இவர் செப்டம்பர்-2022 மாதம் காஞ்சிபுரம், வாலஜபாத் மற்றும் உத்திரமேரூர் பகுதிகளில் வாகன தணிக்கையில்   சுமார் 1500 வாகனங்களை தணிக்கை செய்து 164 வாகனங்களுக்கு அபராதம் விதித்தார்.


 

இதில் ரூபாய் 6,06,700/-  (ஆறு லட்சத்து ஆறாயிரத்து எழுநூறு)  உடன் இணக்கக்கட்டண வசூலாகவும் (ஸ்பாட் பைன்), ரூபாய் 8,71,700/-  (எட்டு லட்சத்து எழுபத்தொராயிரத்து எழுநூறு)   இணக்கக்கட்டணம் மற்றும் வரி வசூல் இலக்காகவும் நிர்ணயம் செய்தும் ஆக மொத்தம் ரூபாய் 14,78,400/- (பதினான்கு இலட்சத்து எழுபதெட்டு ஆயிரத்து நானூறு)  அபராதத்தை அரசுக்கு ஈட்டி கொடுத்து  நடவடிக்கை எடுத்துள்ளார். 

இதில் 74  வாகனங்கள் தகுதிச்சான்று (எப்.சி), அனுமதிசீட்டு (பெர்மிட்), சாலைவரி (ரோடு டாக்ஸ்) போன்ற குற்றங்களுக்காக சிறை பிடிக்கப்பட்டு அருகேயுள்ள காவல் நிலையங்கள், காவல் ஆணையாளர் அலுவலக அண்ணா மைதானம் மற்றும் காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்திலும் நிறுத்தப்பட்டது. 

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் இணை போக்குவரத்து ஆணையர் சென்னை தெற்கு சரகம் ஆகியோர்களின் உத்தரவின் பேரில் காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல் காஞ்சிபுரம் ஆகியோருடன் இணைந்து வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.தினகரன் அவர்களின் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் கா.பன்னீர்செல்வம் முறையற்று இயங்கும் ஆடோக்கள் மீது சிறப்புதணிக்கை செய்து அறுபது ஆட்டோக்களை சிறைபிடித்து காவல் ஆணையாளர் அலுவலக அண்ணா மைதானத்தில் நிறுத்தி இணக்ககட்டனத்தை வசூல் செய்து பின் ஒட்டுனர்களுக்கு சாலைபாதுகாப்பு, வாகன நெரிசல், வாகன ஆவணங்கள் முறையாக பராமரிப்பது போன்றவைகளை விளக்கிக்கூறியும் இனியும் இது போன்ற குற்றங்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து அனுப்பினார்.      

தணிக்கை அறிக்கை வழங்கப்பட்ட 164 வாகனங்களில் கீழ்க்கண்ட குற்றங்கள் குறிப்பிடப்படக்கூடியவையாகவும் சாலை பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாகவும் குறிப்பிடலாம்.

1) சரக்கு வாகனத்தில் அதிக பாரம் ஏற்றியது – 10  

2) ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கியது – 49  

3) காப்புசான்று இல்லாதது – 57

4) ஆட்டோரிக்ஷாவில் கட்டனமாணி இல்லாமல் இயக்கியது – 82

5) தலைகவசம் இல்லாமல் வாகனத்தை இயக்கியது – 18  

6) முறையற்ற பதிவுஎண் கொண்ட வாகனத்தை இயக்கியது – 47

7) அனுமதிசீட்டு இல்லாமல் மற்றும் புறம்பாக இயக்கியது – 19

8) தகுதிச்சான்று இல்லாமல் வாகனத்தை இயக்கியது – 57 

9) சரக்கு வாகனங்களில் தார்பாய் மூடப்படாமல் இயக்கியது – 34 

10) சீருடை இல்லாமல் வாகனத்தை இயக்கியது – 16 

மோட்டார் வாகன ஆய்வாளர் கா.பன்னீர்செல்வம் அவர்கள் இத்தனிக்கை குறித்து விளக்கும்போது, தான் வாகன தணிக்கையின்போது ஒவ்வொரு இடங்களிலும் குற்றம் செய்த வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றியுள்ள பொதுமக்களையும் ஒன்றிணைத்து அந்தந்த குற்றங்களுக்கான விளக்கங்கள், அபராத தொகை மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து அவர்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைத்து, தான் செய்த குற்றத்தை புரியவைத்தும் இனிவரும் காலங்களில் இதுபோன்ற குற்றம் செய்யதவாறு அறிவுரை வழங்கியும் சாலை பாதுகாப்பு விளக்கங்கள் கூறியும் அனுப்பி வைப்பதாகவும், கட்டாயம் தன்னிடம் வாகன தணிக்கையின் போது பிடிபடும் ஓட்டுனர் மீண்டும் அக்குற்றத்தில் ஈடுபடமாட்டார் என்றும் உறுதிபடவும் நெகிழ்வுடனும் கூறினார். 

அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களை எளிதாக அணுகி அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்தும் வருவதாகவும், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விளக்க வகுப்புகளை படிக்காதவர்களுக்கும் புரியும் வண்ணம் அலுவலகத்தில் நடத்திவருவதாகவும் அலுவலகம் வந்து செல்லும் பெருவாரியான பொதுமக்கள் பாரட்டிச்செல்வது அன்றாடம் காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெறும் விஷயாகமகவே உள்ளது. 

பத்திரிக்கை சார்பாக நாமும் அவரையும் அவர் மேற்கொண்டு இருக்கும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்சிகளையும் பாராட்டி மகிழ்கிறோம்.

No comments

Thank you for your comments