Breaking News

நல விடுதிகளில் தங்கிப் பயில மாணவிகள் விண்ணப்பிக்கலாம்...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர்         நல விடுதிகளில்  தங்கிப் பயில விண்ணப்பம் செய்யலாம் (2022-23) என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மாணவியர்களுக்கென  4 பள்ளி விடுதிகள் மாணவியர்களுக்கென செயல்படுகின்றன.   கல்லூரி பயிலும் மாணவியர்கள் அருகில் உள்ள பள்ளி மாணவியர் விடுதிகளில் தங்கி பயில செப்டம்பர் முதல் வாரத்தில் விண்ணப்பம் வழங்கலாம். விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் சலுகைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

அனைத்து விடுதி மாணவிகளுக்கும் உணவும், தங்கும் வசதியும் அளிக்கப்படும். விடுதிகளில் சேருவதற்கான தகுதிகளானது, பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2.00 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.             தகுதியுடைய கல்லூரி மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சியர் வளாகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ கட்டணம் எதுவும் இன்றி பெற்றுக் கொள்ளலாம். 

வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம்
 நெஞ்சை பிளக்கும் வீர வசனங்கள்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் காப்பாளினிகளிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலத்தில் வருகின்ற 10.09.2022க்குள் சமர்ப்பிக்க வேண்டும். 

மாணவிகள் விண்ணப்பிக்கும் போது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ் ஏதும் அளிக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும்போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு விடுதியிலும் மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்களை எக்காலத்திலும் எந்த நேரத்திலும் எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் சேர்த்துக்கொள்ளவும் அவர்களது படிப்பு முடியும் வரை விடுதிளில் தங்கிப் பயிலவும் அனுமதிக்கப்படுகின்றனர். 

எனவே கல்லூரி மாணவியர்கள் அரசின் இச்சலுகைகளை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments