Breaking News

திமுக அரசை கண்டித்து, அதிமுக சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து ஆலோசனைக் கூட்டம்

 காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக அரசை கண்டித்து, அதிமுக சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொன்னேரி ஏரிக்கரை நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களுக்கு மீண்டும் அதே பகுதியில் இடம் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையையும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்படும் என முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.



பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்தும், மின்கட்டணத்தை உயர்த்திய திமுக அரசை கண்டித்து  அதிமுக சார்பில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டம் குறித்தும்  காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் ஓரிக்கை பகுதியிலுள்ள ஓர் தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக அவைத் தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில்  அதிமுக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றி பேசுகையில்,

திமுக அரசை கண்டித்து நடைபெறும் இந்த  மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்று பிரம்மாண்டமான வகையில் ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் என்றும்,   அதிமுக சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலான் கேட் பகுதியில்  நடைபெறும் இந்த  ஆர்பாட்டத்தில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அருகே பொன்னேரி ஏரிக்கரையை ஒட்டி நீர்நிலை ஆக்கிரமிப்பில் பல ஆண்டுகளாக  வசித்து வந்த ஆக்கிரமிப்பாளர்களின் வீடுகள் நேற்றைய தினம் உயர்நீதிமன்ற உத்தரவின்படி அகற்றப்பட்ட நிலையில் தமிழகத்தில் மீண்டும் எடப்பாடியார் தலைமையில் அதிமுகவின் நல்லாட்சி அமைந்தவுடன்  மீண்டும் அப்பகுதியை மறு சீரமைப்பு செய்து வெளியேற்றப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களுக்கு மீண்டும் அதே பகுதியில் இடமளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், அதேபோல் வேகவதி ஆற்றாங்கரையோரங்களில் வசிக்கும்  மக்களை தங்களது வீடுகளை காலி செய்து வெளியேற வேண்டும் என நிர்பந்தம் செய்வதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

மேலும் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியே தொடர வேண்டும் என்பது தான் அனைத்து தொண்டர்களின் விருப்பம்,தமிழகத்தில் எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அம்மாவின் ஆட்சி மலர வேண்டி அனைவரும் அதற்கான ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளர்  வாலாஜாபாத் பா.கனேசன், ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் எம்.எல்.ஏ கே.பழனி, மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் எஸ். எஸ்.ஆர் சத்யா,  மாநில எம் ஜி ஆர் மன்ற துணைச் செயலாளர் எழுச்சூர் ராமச்சந்திரன், மாநில பாசறை துணைச் செயலாளர் இருங்காட்டுக்கோட்டை சிவக்குமார், மாவட்டத் துணைச் செயலாளர் போந்தூர் செந்தில் ராஜன், ரேவதாட்சாயணி சுந்தர்ராஜன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யூ.எஸ். சோமசுந்தரம், ஒன்றிய கழகச் செயலாளர்கள் தும்பவனம் ஜீவானந்தம், களக்காட்டூர் ராஜு, அத்திவாக்கம் ரமேஷ், அக்ரி நாகராஜ், எறையூர் முனுசாமி, சிங்கிள் பாடி ராமச்சந்திரன், பகுதி கழகச் செயலாளர்கள் பாலாஜி,கோல்ட் ரவி, ஸ்டாலின்,ஜெயராஜ், வாலாஜாபாத் பேரூராட்சி செயலாளர் ஹரிகுமார், மாங்காடு நகரச் செயலாளர் பிரேம் சேகர், கீழம்பி ஒன்றிய கவுன்சிலர் ஆம்பி விமல்ராஜ்,ஸ்ரீபெரும்புதூர் கூட்டுறவு வங்கி தலைவரும் மாவட்ட பிரதிநிதியுமான வெங்காடு உலகநாதன், மாநகராட்சி கவுன்சிலர் சிந்தன்,ஓரிக்கை பிரேம்குமார், மாநகராட்சி மூன்றாவது வார்டு வட்ட செயலாளர் கல்வெட்டு சிவாஜி, அதிமுகவின் தகவல் தொழில் நுட்ப பிரிவு சம்பத் தனபால், நகர சிறுபான்மை பிரிவு செயலாளர் முகமது அன்சாரி,  மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சதீஷ்குமார், கோல்ட் மோகன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ரவிசங்கர்,  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

No comments

Thank you for your comments