மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.11,96,136/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்..
காஞ்சிபுரம் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு ரூ.11,96,136/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (26.09.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 360 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 6 மாற்றுதிறனாளி பயனாளிகளுக்கு ரூ.1,27,332/- மதிப்பிலான தொழில் தொடங்க வங்கி மானிய கடன் உதவிகளையும், 10 மாற்றுதிறனாளிகளுக்கு பயனாளிகளுக்கு ரூ.1,27,332/- மதிப்பிலான தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டைகளையும் வழங்கினார்.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் வணிக துறை சார்பில், 4 பயனாளிகளுக்கு ரூ.10,68,804 /- மதிப்பிலான மரச்செக்கு மற்றும் மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவிகளை வழங்கினார். தமிழ் வளர்ச்சி துறை சார்பில், தமிழ்நாடு நாள் விழா மற்றும் முத்தமிழ் கலைஞர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசுகள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் திரு.கோ.சிவருத்ரய்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.இரவிச்சந்திரன், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருமதி.சுமதி, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் திரு.கு.பிரகாஷ் வேல், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.பாபு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.சரவணகுமார், வேளாண் துணை இயக்குநர் திரு. முகமது இரபீக் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.


No comments
Thank you for your comments