Breaking News

ஆண்கள் பெண்களுக்கான நவநாகரீக அழகு நிலையம்.

ஆண்கள் பெண்களுக்கான நவநாகரீக அழகு நிலையத்தை சிறு குறு தொழிற்சாலைகள் துறை அமைச்சர் தாமோ அன்பரசன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.




பன்னாட்டு தரத்துடன் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ள காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட முக்கிய சாலையான திருக்கச்சி நம்பி தெரு பகுதியில் டோனி அன்டு கய் எஸ்ஸேன் சூல்ஸ் என் பெயரில் முடி திருத்தம் மற்றும் அழகு சாதன நிலையத்தின் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் தமிழக சிறு குறு தொழில் துறை அமைச்சர் தாமு அன்பரசன் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து,தொழில் சிறந்து வளர வாழ்த்து தெரிவித்தனர்.


விழாவில் சிறப்பு அழைப்பாளராக டாக்டர் சாம்பவுல், காஞ்சிபுரம் மாநகராட்சி செயளாலர் சன். பிராண்ட் கே.ஆறுமுகம், திமுக வர்த்தக அணி செயலாளர் ராமகிருஷ்ணன், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் யுவராஜ்,மாணவர் அணி மாவட்ட துணை செயலாளர் அபுசாலி, மாநகராட்சி கவுன்சிலர் கமலக்கண்ணன்,நகரின் முக்கிய பிரமுகர்களும், கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் நிறுவனத்தின் உரிமையாளர் வரவேற்று உபசரித்து நன்றி தெரிவித்தனர்.





No comments

Thank you for your comments