Breaking News

காவல்துறைக்கு டிமிக்கி கொடுத்தவர்களை அமிக்கி பிடித்த போலீசார்

காஞ்சிபுரம்: :

சுதந்திர தின விழாவையொட்டி நேற்று முன்தினம் தமிழகம் முழுவதுமுள்ள அரசு மதுபான கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளது.


இந்நிலையில் காஞ்சிபுரம் ஒலிமுகமது பேட்டை ரோட்டு தெருவில்  கள்ளசந்தையில் மதுபான விற்பனை படு நடைபெற்று வருவதாக நேற்று மாலை சிவகாஞ்சி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

காத்தாடி வாழ்க்கை -  குறும்படம்

விளையாட்டு வினையானது

இத்தகவலின் அடிப்படையில் அங்கு மாறுவேடத்தில் சென்ற போலீசார் மதுபானங்கள் வாங்குவது போல் கேட்டு மது விற்பனையை உறுதி செய்தனர்.இதனையெடுத்து அப்பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை செய்ததில் மழைநீர் வடிகால்களிலும், பூட்டப்பட்டிருந்த வீடுகளிலும் மதுபானங்கள் மூட்டை மூட்டையாய் சாக்குபைகளில் இருப்பது தெரியவந்தது.

மேடையில் 4 கால் பிராணிபோல் தவழ்ந்து வந்து பதவி பெற்றார்...  இபிஎஸ்-ஐ பங்கம் செய்த டிடிவி தினகரன்


இச்சோதனையில் நான்கு வீடுகளில் மதுபான பாட்டில்கள் மறைத்து வைத்து மதுபான விற்பனை நடந்து வந்தது தெரியவந்தது.இதனையெடுத்து அவ்வீடுகளில் இருந்து மொத்தம் 273 மதுபான பாட்டில்கள் கைப்பற்றப்பட்டு செல்வகுமார் (26),சுகுமார்(60), விஜயா(60), சித்ரா(40) என தாய் மகன் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆயினும் அப்பகுதியில் மீண்டும் சற்று நேரத்திலேயே அப்பகுதியில் மதுபான விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு வந்த தகவலின் பெயரில் அங்கு நேரில் சென்ற சிவகாஞ்சி ஆய்வாளர் விநாயகம் அங்கு சோதனை மேற்கொண்டார்.அப்போது அங்கு  புதர்களிலில் சாக்கு பை மற்றும் புத்தக பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கமல்ஹாசனின் ‘கணீர்’ குரலில்
சுதந்திர போரில் தமிழர்களின் பங்கை 
பறைசாற்றும் ஒலி - ஒளி நிகழ்ச்சி
நிகழ்ச்சியை வியந்து பார்த்த வெளிநாட்டவர்கள்

கள்ளசந்தையில் மதுபானம் விற்பனை செய்ததாக 4பேர் கைது செய்யப்பட்டும்  அதனை சிறிதும் பொருட்படுத்தாது தொடர்ந்து அச்சமின்றி அசராத  விற்பனையில் ஈடுபட்ட விஷமிளின் செயல் காவல்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments

Thank you for your comments