வேலைவாய்ப்பு பதிவுதாரர்கள் பதிவு விவரங்கள் சரிபார்த்துக்கொள்ள அழைப்பு...
காஞ்சிபுரம்:
ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்டதைத்தொடர்ந்து, 25.01.2022 தேதி முதல் செங்கல்பட்டு மாவட்டத்திற்கென்று தனியே மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (Government I.T.I.) வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு மாவட்ட எல்லைக்குள் வரும் பதிவுதாரர்களின் தரவுகள் (Data) ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து பிரித்து செங்கல்பட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.
மேலும், ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்ட எல்லைக்குள் இருந்த சோழிங்கநல்லூர் மற்றும் ஆலந்தூர் வருவாய் வட்டங்கள் சென்னை மாவட்டத்தில் இணைக்கப்பட்டதைத்தொடர்ந்து, அந்த தாலூக்காவை சேர்ந்தவர்களின் பதிவுகள் சென்னை மாவட்டத்தில் பதிவு செய்யப்படவேண்டும்.
காத்தாடி வாழ்க்கை - குறும்படம்
விளையாட்டு வினையானது
மேலும், ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் தத்தமது முகவரி எம்மாவட்ட எல்லைக்குள் வருகிறது என்பதையறிந்து, காஞ்சிபுரம் மாவட்டமாக இருப்பின் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் காஞ்சிபுரத்திலும், செங்கல்பட்டு மாவட்டமாக இருப்பின், செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலும் சரிபார்த்துக்கொள்ளும்படி சென்னை மாவட்ட எல்லைக்குள் வருவாராயின் அதையும் பதிவுதாரர்கள் சரிபார்த்துக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம்.

No comments
Thank you for your comments