Breaking News

டெல்லி ஜந்தர் மந்தரில் தீவிரமடைந்த போராட்டம்!

புதுடெல்லி, ஆக.23-

விவசாயிகள் போராட்டம் காரணமாக டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் பக்கத்து மாநிலங்களை சேர்ந்த ஏராளமான போலீசார் எல்லைகளில் பாதுகாப்புக்கு நிறுத்தப் பட்டுள்ளனர்.  போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.

விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் மகா பஞ்சாயத்து எனப்படும் 72 மணிநேர போராட்டம் நடத்தப் போவதாக முடிவு செய்திருந்தனர். வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைத்த சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பு இந்த போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்திருந்தது. 

விதிமுறைகள் மீறி மணல் கொள்ளை... 
அந்த குழியில் போட்டு அவர்களை மூட வேண்டும்... 
திராவிட கட்சிகள் மீது பாய்ந்த சீமான்..

இந்த அழைப்பை ஏற்று டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் நேற்று முதலே ஜந்தர் மந்தரை நோக்கி வரத் தொடங்கினார்கள். வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் இந்த போராட்டத்தை ஒடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர். 

நடிகர் ஜெயம் ரவியின்..
மௌனம் கலைவோம்..குறும் படம்

இதற்காக அரியானா, உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு செல்லும் அனைத்து சாலைகளையும் போலீசார் தடுப்பு வேலிகளை அடைத்து மூடினார்கள். மேலும் டெல்லி மற்றும் பக்கத்து மாநிலங்களை சேர்ந்த ஏராளமான போலீசார் எல்லைகளில் பாதுகாப்புக்கு நிறுத்தப் பட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக பாரதீய கிசான் யூனியன் செய்தித் தொடர்பாளரும், சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பின் மூத்த தலைவருமான ராகேஷ் தியாகத்  ஜந்தர் மந்தர் சென்றபோது அவரை காசிப்பூரில் தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் அவர் போராட்டத்தில் பங்கேற்காமல் திரும்பி சென்றார். 

இந்தநிலையில் திட்டமிட்டபடி டெல்லியில் இன்று காலை முதல் விவசாயிகள் போராட்டம் தொடங்கியது. டெல்லி ஜந்தர் மந்தரில் சுமார் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள் ஜந்தர் மந்தர் மைதானத்தில் தரையில் அமர்ந்து கோஷம் எழுப்பி தங்கள் கோரிக்கைகளை அரசுக்கு தெரிவித்தனர். 

இந்நிலையில் விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் டிக்கைத் கூறுகையில், 

காசியாபூர் எல்லையில் என்னை தடுத்து நிறுத்தி திரும்பிச் செல்லச் செய்தனர் என்று ட்வீட் செய்துள்ளார். இதுபோன்ற தடுப்புக் காவல்களால் போராட்டத்தை ஒடுக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் அவர் பதிந்த மற்றொரு ட்வீட்டில், நாங்கள் எங்கள் இறுதி மூச்சுவரை போராடுவோம். ஒருபோதும் சோர்ந்துவிட மாட்டோம் என்று பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக சம்யுக்தா கிசான் மோர்சா சங்க தலைவர் பல்தேவ் சிங் சிர்ஸா அளித்த பேட்டியில், 

“பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் திரண்டுள்ளனர். எங்கள் கோரிக்கைகள் எப்போதுமே போராடினால் மட்டுமே கவனிக்கப்படுகிறது. அது ஏன்? அரசாங்கம் எங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காவிட்டால் போராட்டங்களை தீவிரப்படுத்துவோம். இங்கு போராடத் திரண்டிருப்பவர்கள் அனைவருமே அரசியல் சார்பற்றவர்கள்.

கடந்த நவம்பரில் மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறப்பட்டன. அதன் பின்னர் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க ஒரு குழு அமைக்கப்படும். அது அனைவருக்கும் ஏற்புடையதாக இருக்கும் என்று கூறினார்கள். ஆனால் அப்படியேதும் இதுவரை நடைபெறவில்லை. அந்த அமைப்பே கேலிக்கூத்தாக இருக்கிறது.


பிரதமருடன் சந்திப்புக்கான காரணம் என்ன? 
டெல்லியில்  செய்தியாளர் சந்திப்பில்
முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

டெல்லி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படும் என்றனர். அதுவும் இன்னும் வாபஸ் பெறப்படவில்லை. லக்கிம்பூர் கேரி சம்பவத்திற்கு நீதி கோரி வருகிறோம். அது நிலைநாட்டப்பட வேண்டும். எம்எஸ்பி என்ற விவசாய உற்பத்திகளுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலையை எம்.எஸ்.ஸ்வாமிநாதன் அறிக்கையில் உள்ள பரிந்துரைகளின்படி நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் எங்கள் போராட்டம் தொடரும்“ என்றார்.

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் உச்சகட்ட பாதுகாப்பு

இந்நிலையில் டெல்லியில் குறிப்பாக மாநில எல்லைகளில் போலீஸார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.

டெல்லி, ஹரியாணா இடையேயான சிங்கு எல்லையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தடுப்புக்காவலில் எடுக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், டெல்லி ஹரியாணா, டெல்லி உத்தரப் பிரதேச மாநிலங்களை இணைக்கும் சாலைகளில் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

* டெல்லியின் எல்லையோர மாவட்டங்களில் ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

* பாதுகாப்பு காரணங்களுக்காக விரிவான போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக டெல்லி ஜன்பத், கனோட் ப்ளேஸ், அசோகா சாலை, சன்சட் மார், டால்ஸ்டாய் மார்க் பகுதிகள் பாபா காரக் சிங் மார்க், பண்டிட் பன்ட் மார்க் ஆகிய பகுதிகளை மக்கள் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

* டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

கர்னால் பைபாஸ், நரேலா எல்லை, பாலம் மேம்பாலம், அரபிந்தோ மார்க் ஆகிய பகுதிகளில் ஒரு மணி நேரமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு வாகனமும் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுப்பிவைக்கப்படுகிறது. போக்குவரத்து நெரிசலை சமாளிக்க மட்டும் கூடுதல் படைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

டெல்லி உத்தரப் பிரதேச எல்லையான காசியாபாத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.


No comments

Thank you for your comments