Breaking News

மாநில அரசின் வீடு வழங்கும் திட்டத்தில் நீளும் குளறுபடி!

காஞ்சிபுரம், ஆக.1-

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 'கலைஞர் வீடு' வழங்கும் திட்டத்தில், கிராம நிர்வாக அலுவலர்கள் எனும் வி.ஏ.ஓ.,க்களின் பங்கேற்பு இல்லாமல் கணக்கெடுப்பு பணி முடிந்துள்ளது. இதனால் தகுதியான பயனாளிகளை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

குடிசை வீடுகளில் வசிப்போருக்கு கான்கிரீட் வீடு வழங்கும் திட்டம், 10 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டது.தொடர்ந்து பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட நிலையில், தி.மு.க., ஆட்சி பொறுப் பேற்றதும், கலைஞரின் வீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்ட பயனாளிகளை தேர்ந்தெடுக்க, குடிசை வீடுகளில் வசிப்போரிடம் கணக்கெடுப்பு நடத்த கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலர், பஞ்சாயத்து அளவிலான குழு கூட்டமைப்பு ஆகியோர் இணைந்து செயல்பட, அரசு அறிவுறுத்தியது.கிராமம் தோறும் கள ஆய்வு செய்து, குடிசை வீட்டில் வசிப்போர் குறித்து அறிக்கை அளிக்க அறிவுறுத்தப்பட்டது.

இத்திட்ட கணக்கெடுப்பு தொடர்பான பயிற்சி வகுப்பு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல பகுதிகளில் ஏப்., 2ம் தேதி நடந்தது.அன்றைய தினம், தெலுங்கு வருட பிறப்பு அரசு விடுமுறை நாள் என்பதால், பயிற்சி வகுப்பை, கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

இதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு மீண்டும் நடக்கவில்லை.உயர் அதிகாரிகளின் நெருக்கடி காரணமாக, கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்பு இல்லாமல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும், ஊராட்சி செயலர், பஞ்சாயத்து அளவிலான குழு கூட்டமைப்பினர் மட்டும் இணைந்து, கணக்கெடுப்பை நடத்தி முடித்துள்ளனர்.

இந்த கணக்கெடுப்பின் அடிப்படையில், கலைஞர் வீடு வழங்கும் திட்ட பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, வீடுகள் கட்டித்தரப்பட உள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 5,193 பேருக்கு தகுதி இருப்பதாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. 


பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் கோலகலமாக
 செஸ் ஒலிம்பியாட் போட்டி   துவக்க விழா - முழு தொகுப்பு

இக்கணக்கெடுப்பில் கிராம நிர்வாக அலுவலரின் பங்களிப்பு இல்லாததால், தகுதியான பயனாளிகளை தேர்வு செய்வதில் குளறுபடி நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது, கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில், அரசு வழிகாட்டுதலின்படி பயனாளிகள் கணக்கெடுப்பு நடக்கவில்லை.கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்காததால், பயனாளிகள் எந்த வகையான நிலத்தில் வசிக்கிறார். அரசு திட்டத்திற்கு தகுதி உடையவரா, இல்லையா என்பதை வரையறை செய்யவில்லை.நில உடைமை ஆவணம் சரிபார்க்கப்படாததால், மேய்க்கால் புறம்போக்கு, நிர்நிலைகள் உள்ளிட்ட அரசு நிலங்களை ஆக்கிரமித்து குடியிருப்போரிடமும், கணக்கெடுப்பு நடந்துள்ளது.

கிராம நிர்வாக அலுவலர்கள் இல்லாமல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், ஏகப்பட்ட குளறுபடி உள்ளது.அரசு அறிவுறுத்தலின்படி, ஊராட்சி செயலர், பஞ்சாயத்து குழு மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் இணைந்து மீண்டும் கணக்கெடுத்து, தகுதியான நபர்களுக்கு அரசு வீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments

Thank you for your comments