Breaking News

பல்வேறு சிறப்பு திட்டங்களின் கீழ் கடனுதவி பெற வாய்ப்பு

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) மாநில அளவில் செய்யப்பட்டு வரும் ஒரு தமிழ்நாடு அரசு நிதிக்கழகம் ஆகும். 1949 ஆம் ஆண்டு துவங்கப் பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது.

இக்கழகம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் / சேவை பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை / சேவை நிறுவனங்களை நிறுவுவதற்கும் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப் படுத்துவதற்கும் பல்வேறு சிறப்பு திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.

பூந்தமல்லி கிளை அலுவலகத்தின் முகவரி எண் 13,  ராமானுஜக் கூடம் தெரு, பூந்தமல்லி, சென்னை 600 056 குறு, சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா 17.08.2022 முதல் 02.09.2022 வரை நடைபெறுகிறது.

 இச்சிறப்பு தொழில் கடன் விழாவில் டி.ஐ.ஐ.சி.யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள் மத்திய மாநில அரசுகளின் மானியங்கள், மூலதனமானியம், வட்டி மானியம் மற்றும் இதர மானியங்கள் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25% முதலீட்டு மானியம் ரூபாய் 150 லட்சம் வரை வழங்கப்படும்.

காத்தாடி வாழ்க்கை -  குறும்படம்

விளையாட்டு வினையானது

இந்த விழா காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50% விழுக்காடு சலுகை அளிக்கப்படும். இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர் / தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

மேலும் தகவல்களுக்கு +91-44-48050574 மற்றும் 044-26462466 என்ற எண்ணிற்கு  தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம்.


 

No comments

Thank you for your comments