கஞ்சா விற்பனையை காட்டிகொடுத்த இளைஞருக்கு சரமாரியான அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்
கொடிகட்டி பறந்த கஞ்சா விற்பனையை காட்டிகொடுத்த இளைஞருக்கு சரமாரியான அரிவாள் வெட்டு... வெட்டு காயங்களுடன் இருந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் ஓரிக்கை டெம்பிள் சிட்டி கணேஷ் நகர் பகுதியை சேர்ந்த குமார் என்பவரின் மகன் விக்கி(27). புகைபட கலைஞராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு தனது வீட்டின் வெளியில் உறவுமுறை தம்பி ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த போது 18வயதிற்கு உட்பட்ட 6 முதல் 7 பேர் கொண்ட மர்ம கும்பல் மதுபான பாட்டில்களை கொண்டு வீசி பின்னர் தங்களது கைகளில் வைத்திருந்த பட்டாக்கத்திகளை கொண்டு விக்கியின் கை, கழுத்து, தலை போன்ற பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதில் நிலைகுலைந்து போன விக்கி மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இச்சம்பவம் குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு விரைந்து வந்த தாலுகா போலீசார் விக்கியை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலந்த காயங்களுடன் இருந்த விக்கிக்கு அங்கு முதலுதவி சகிச்சைகள் அளிக்கப்பட்டு மருத்துவர்களின் பரிந்துரையின் பெயரில் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு சகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
அப்பகுதியில் கஞ்சா விற்பனை கொடி கட்டி பறந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கொடுத்து வந்ததும், கடந்த மாதம் இவர் கொடுத்த தகவலின் பெயரில் நான்கு கஞ்சா விற்பனை பெருச்சாளிகள் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடதக்கது.
இச்சம்பவம் பொதுமக்கிளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



No comments
Thank you for your comments