தாட்கோ திட்டத்திற்கு குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு உயர்வு அறிவிப்ப
காஞ்சிபுரம்:
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் (தாட்கோ) மூலமாக செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டு திட்டத்திற்கு குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.2.00 இலட்சமாக நடைமுறையில் இருந்தது.
அதிக எண்ணிக்கையிலான நபர்கள் பயனடையும் வகையில் தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பினை ரூ.2.00 இலட்சத்திலிருந்து ரூ.3.00 இலட்சமாக உயர்த்தி நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகள் மீறி மணல் கொள்ளை...
அந்த குழியில் போட்டு அவர்களை மூட வேண்டும்...
திராவிட கட்சிகள் மீது பாய்ந்த சீமான்..
எனவே, ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்கள் இத்திட்டத்தின் மூலமாக பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம்.
No comments
Thank you for your comments