Breaking News

மதுரை, திருநெல்வேலி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் புத்தொழில் மையங்கள் திறப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (02-08-2022), சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் காப்பகங்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், மூன்றாம் நிலை நகரங்களில் புத்தொழில் முனைவை ஊக்குவிக்கும் விதமாக மதுரை, திருநெல்வேலி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள வட்டார புத்தொழில் மையங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். 


உடன் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் வி.அருண் ராய், தொழில் ஆணையர் சி.ஜி.தாமஸ் வைத்யன், தமிழ்நாடு புத்தொழில் புத்தாக்க இயக்கத்தின் இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் சிவராஜா இராமநாதன், ஐஎஸ்பிஏ அமைப்பின் தலைவர் டாக்டர் கே.சுரேஷ் குமார், ஸ்டார்ட்அப் இந்தியா தலைவர் அஸ்தா குரோவர் மற்றும் காணொலிக் காட்சி வாயிலாக சட்டமன்றப் பேரவை தலைவர் மு.அப்பாவு,  வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மை த்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள், திருநெல்வேலி, ஈரோடு மற்றும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.










பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் கோலகலமாக
 செஸ் ஒலிம்பியாட் போட்டி   துவக்க விழா - முழு தொகுப்பு

No comments

Thank you for your comments