பரந்தூர் விமான நிலையம் வேண்டாம்.. பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்..
காஞ்சிபுரம், ஆக.21-
எங்களுக்கு விமான நிலையம் வேண்டாம் என ஏகனாபுரம் கிராம மக்கள் கருப்பு கொடி ஏந்தி அம்பேத்கர் சிலை அருகே சுமார் 300க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைய உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.இதற்கு பரந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்ககூடிய மக்கள் தங்களது எதிர்ப்பினை ஆர்பாட்டம், போராட்டம் வாயிலாக வெளிபடுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பரந்தூர் விமான நிலையம் சென்னைக்கு மிக முக்கிய தேவை எனவும், பரந்தூர் விமான நிலையம் அமைந்தால் அரசுக்கு பொருளாதார ரீதியில் லாபம் கிடைக்கும் என தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
ஆரம்பம் முதலே அப்பகுதி மக்கள் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இன்று பரந்தூர் அடுத்த ஏகனாம்புரம் கிராம மக்கள் திடீர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கருப்பு கொடி ஏந்தி கிராமத்திலிருந்து ஊர்வலமாக நடந்து வந்து, ஏகனாம்புரம் அம்பேத்கர் சிலை அருகே கிராம மக்கள் 300க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள் தங்களுக்கு விமான நிலையம் வேண்டாம் என கோஷங்களை எழுப்பியும், கிராம மக்கள் தங்களுடைய கைகளில் விமான நிலையம் வேண்டாம், இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற பதாகைகளை கையில் ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நடிகர் ஜெயம் ரவியின்..
மௌனம் கலைவோம்..குறும் படம்
இந்த ஆர்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் குழந்தைகள் உட்பட கிராமத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது போக கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி தங்களுடைய எதிர்ப்பை வெளிபடுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பெண்கள் சிலர் திடீரென ஒப்பாரி வைத்து அழுது போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


No comments
Thank you for your comments