உயர் நீதிமன்ற உத்தரவை மீறி அரசு டாஸ்மாக் மதுபான கூடம் ஏலம்.. மண்டல மேலாளர் அலுவலகம் முற்றுகை..
காஞ்சிபுரம் :
உயர் நீதிமன்ற உத்தரவை மீறி அரசு டாஸ்மாக் மதுபான கூடம் ஏலம் நடைபெறுவதாக காஞ்சிபுரம் மாவட்ட மதுபான கூட உரிமையாளர்கள் குற்றச்சாட்டு. மண்டல மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசின் சார்பில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைகளில் மதுபானக்கூடங்கள் நடத்துவதற்கான டெண்டர் கோரப்பட்டிருந்தது.
அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட தெற்கு மண்டலத்தில் உள்ள 120 அரசு மதுபான கடைகளில் மதுபானக்கூடங்கள் நடத்த டெண்டர் கோரப்பட்டிருந்தது.
நெஞ்சை பிளக்கும் வீர வசனங்கள்
இந்நிலையில் மதுபானம் அருந்தும் கூடம் வைத்திருக்கும் உரிமையாளர்கள் காஞ்சிபுரம் தெற்கு மண்டல அலுவலகத்தில் மதுபானம் கூடங்களுக்கான ஏலம் முறையாக நடைபெறவில்லை என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.
வழக்கு விசாரணையில் அரசு மதுபான கடைகளில் மதுபான கூட்டங்களுக்கான டெண்டரை நடத்தக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் தெற்கு மண்டல அலுவலகத்தில் அரசு மதுபான கடைகளில் மதுபான கூடங்கள் நடத்துவதற்கான டெண்டர்களை பிரித்து முடிவுகளை அறிவிக்கும் பணி இன்று நடைபெற்றது.
அதன்படி ஏற்கனவே அரசின் விதிமுறைகளை பின்பற்றி டெண்டர் விண்ணப்பங்களை அளித்திருந்த மதுபான கூட உரிமையாளர்களுக்கு வழங்காமல், எவ்வித விதிமுறைகளையும் பின்பற்றாமல் வேறு சில நபர்களுக்கு வழங்கி உள்ளனர்.
இதுகுறித்து அறிந்த மதுபான கூட உரிமையாளர்கள் ஏராளமானோர் ஓரிக்கை அலுவலகத்திற்கு திரண்டு வந்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக அரசு மதுபான கிடங்கு அலுவலகம் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டு தொடர்ந்து உயர் நீதிமன்ற உத்தரவையும் மீறி டெண்டர் விடும் பணி நடைபெற்றது.
காத்தாடி வாழ்க்கை - குறும்படம்
.jpg)

No comments
Thank you for your comments