சுகவனேசுவரர் கோவிலில் செப்.7ம் தேதி கும்பாபிஷேகம்
சேலம், ஆக.21-
சேலம் சுகவனேசுவரர் கோவிலில் திருப்பணிகள் நிறைவு பெற்று வருகிற 7ம் தேதி கும்பாபேஷகம் நடக்கிறது என கோவில் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
சேலம் டவுன் பகுதியில் புராண கால சிறப்பு கொண்ட சுகவனேசுவரர் கோவில் உள்ளது. இக்கலியுகத்திலே சுகப்பிரும்மரிஷி வழிபட்டதால் சுகவனம் எனவும் பெயர் பெற்றது. இதுபோன்ற மகிமை வாய்ந்த இத்தலத்திலே இறைவன் சுகவனேசுவரர் எனும் திருநாமத்தோடு, இறைவி சொர்ணாம்பிகை அனும் திருநாமத்தோடு அருளாட்சி புரிந்து பக்கதர்களுக்கு வேண்டிய வரங்களை அருளும் அருள்மிகு சொர்ணாம்பிகை உடனுறை அருள்மிகு சுகவனேசுவரர் சுவாமிக்கு செப்டம்பர் மாதம் 7ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது.
நடிகர் ஜெயம் ரவியின்..
மௌனம் கலைவோம்..குறும் படம்
இது குறித்து, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அறங்காவலர்கள் குழு தலைவரான சோனா கல்விக் குழுமத்தின் தலைவர் வள்ளியப்பா. கூறியதாவது.
கும்பாபிஷேக விழா செப்டம்பர் 1ம் தேதி தொடங்குகிறது 2ம் தேதி புண்யாஹாவாசனம், மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடைப்பெறவுள்ளன. 4ம் தேதி முதல் கால யாக பூஜை, 5ம் தேதி இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜை, சுவாமிக்கு அஷ்டபந்தனம் சாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், 6ம் தேதியன்று, 4 மற்றும் 5ம் கால யாக பூஜை, பூர்ணாஹீதி, தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன 7ம் தேதி காலை 10.50 மணிக்கு, அனைத்து விமானங்கள் மற்றும் அனைத்து ராஜகோபுரங் களுக்கும் சமகால மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடத்தப்படவுள்ளது.
காலை 11.15 மணிக்கு சுகவனேஸ்வரர் - சொர்ணாம்பிகை அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம், மகா தீபாராதனை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். மாலை 5 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா நடைபெறும் எனவே பக்தர்கள் அனைவரும் திரளாக வந்து கலந்து கொண்டு கடவுள் அருள் பெற வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழு தலைவரான சோனா கல்விக் குழுமத்தின் தலைவர் வள்ளியப்பா. ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.
இந்த நிகழ்வின் போது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் அறங்காவலர்கள், தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் வீ.கார்த்திகேயன். ஆகியோர் உடனிருந்தனர்.

No comments
Thank you for your comments