நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நோக்கில் 51 புதிய அமிர்தகுளங்கள் உருவாக்கம்
சேலம், ஆக.22-
சேலம் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நோக்கில் 51 புதிய அமிர்தகுளங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியம், வெள்ளாளபுரம் ஊராட்சியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அமிர்த குளத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம் செய்தியாளர் பயணத்தில் 20.08.2022 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். இச்செய்தியாளர் பயணத்தின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி அன்றாட பயன்பாட்டிற்கு போதுமான அளவு குடிநீர் கிடைத்திடவும், விவசாய தேவைக்கு போதிய அளவிலான நீர் கிடைத்திடவும் பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியம், வெள்ளாளபுரம் ஊராட்சியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அமிர்த குளத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக துவங்கப்பட்ட சுதந்திர தின அமுதப்பெரு விழாவின் ஒரு பகுதியாக புதிய நீர்நிலைகளை உருவாக்கும் பொருட்டு குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட அமிர்த குளங்களை (கினீக்ஷீவீt ஷிணீக்ஷீஷீஸ்ணீக்ஷீ) உருவாக்கிடவும், ஏற்கனவே உள்ள குளங்களை புரனமைத்திடவும் நீர்பிடிப்பு பகுதி மற்றும் நீர் வழிப்பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர் நிலைக்கு வரும் கழிவுநீரை சுத்திகா¨ப்பு செய்தல் மற்றும் மரக்கன்றுகளை நடுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள அரசால் தொ¨விக்கப்பட்டது.
அதனடிப்படையில், சேலம் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 160 பணிகளும் ஊரக பகுதிகளில் இடங்கள் தோ¦வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றது. தேர்வு செய்யப்பட்ட 160 பணிகளில் 104 புதிதாக அமிர்தகுளம் அமைக்கும் பணிகளும், ஏற்கனவே உள்ள 56 குளங்களை புனரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணிகளை மேற்கொள்வதற்கான நிதியினை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா¦ச்சித்திட்டம் மற்றும் வேளாண் பொறியியல் துறை மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், அமிர்த குளங்கள் பணியிலிருந்து தோண்டி எடுக்கப்படும் மண்ணை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் , சென்னை கன்னியாகுமா¨ தொழிற்தடத் திட்டம், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத்திட்டம் போன்ற துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் சாலை பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. உருவாக்கப்பட்ட குளங்களின் கரைகளில் மரக்கன்றுகளை நடுதல், பனை விதைகளை நடுதல் மற்றும் குளத்தின் அருகிலேயே பூங்காக்களை உருவாக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கடந்த சுதந்திர தினத்தன்று 36 புதிய அமிர்தகுளங்கள் உருவாக்கப்பட்டும் 15 ஏற்கனவே உள்ள குளங்களை புனரமைத்தும் பணிகள் முடிவுற்ற 51 அமிர்த குளங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. மேலும், எஞ்சியுள்ள 109 பணிகளும் அடுத்த 2023 - ஆகஸ்ட் -15 க்குள் முழுமையாக முடித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மழைக் காலத்தில் பெய்யும் மழைகள் முதலில் ஓடைகள் வழியாக, குளங்களை அடைந்து, குளங்கள் நிரம்பிய பின், கண்மாய்கள் ஏரிகளைக் கடந்து, பின் ஆறுகளில் பெருக்கெடுக்கிறது. இப்படி வெள்ளத்தில் கொண்டு வரப்படும் நீரிலுள்ள தாதுக்களும் மணல்களும் குப்பைகளும் மேற்புறத்தில் தேங்குவதால் குளங்கள் நிலத்தடிக்கு நீரினை செலுத்த முடியாமல், மேலோட்டமாகவே நீரினைப் பிடித்து வைக்கிறது. இதனால் கோடைகால வெயிலில் சீக்கிரமாக நீர் ஆவியாகி, குளங்கள் விரைவில் வறண்டு விடுகின்றன. நிலத்தடியில் நீர் சேகாரமாகாததால், கிணறுகளுக்கும் நீர் வரத்து இல்லாமல் போகிறது.
ஒவ்வொரு ஆண்டும் குளங்கள் தூர்வாரப்படுமானால், குளங்கள் மழைக்காலத்தில் நிலத்தடிக்கு நீரை கொடுத்து, தானும் நன்கு தேக்கி வைத்துக்கொள்ளும். எனவே, தங்கள் குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள குளங்களை பொதுமக்களும் ஒன்றிணைந்து புனரமைக்க முன்வர வேண்டும். குறிப்பாக இளைஞா¦கள் பொறுப்பேற்று செயல்களில் ஈடுபடுதல் தற்போது அவசியமானது. தன் குடும்பம், தன் வீடு, தன் பிள்ளைகள் என குறுகிய வட்டத்திற்குள் இல்லாமல், விசாலமான பார்வையுடன் பார்த்தால், நமக்குப் பின்னால் வரும் சந்ததிகளுக்காக குளங்களையும் ஏரிகளையும் ஆறுகளையும் காப்பாற்றி வைத்து அவா¦களுக்கு நாம் பா¨சளித்துச் செல்லலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம் தெரிவித்துள்ளார்.
இச்செய்தியாளர் பயணத்தின்போது கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சீ.பாலச்சந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி செயற்பொறியாளர் அருள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அசோகராஜன், சி.கௌரி, உதவி பொறியாளர்கள் துரைசாமி, காமராஜ், வெள்ளாளபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி கணேசன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து
கொண்டனர்.

No comments
Thank you for your comments